Sunday, July 29

முடிந்தது ஞாயிறு!



நத்தையாய் நகர்ந்து வரும் ஞாயிறு
போவது மட்டும் முயல் வேகத்தில்

முந்தியது முயல்,
முடிந்தது ஞாயிறு.

குழம்பிய நொடி!


தேன்குழல் தேகத்தை திருட ஏறி,
ஊறிடும் எறும்புகள் சறுக்கிவிழும்,
சறுக்கு மாரமாய் அவள் இடையும்,
என் எடையை எப்படி சுமக்க போகிறதோ -
தெரியவில்லை,

இறுக்கி பிடித்துக்கொள்ளவா, இல்லை
இறுக அனைத்துக்கொள்ளவா?

குழம்பிய நொடியில், விழுந்தாள் என் மடியில்.






- எழுத்தோலை கோ.இராம்குமார் -

பட்டினத்து யுவதிகள்.!

எருமை மாட்டிற்கு உறைக்கும் அளவில்
ஒலி எழுப்பியும் ஓரம் போகா பசுமாடுகள்,

காதுக்கேள் பொறியுடன் பேசியபடி,
எங்கேயோ பறந்துக்கொண்டிருக்கும்,
பட்டினத்து யுவதிகள்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

மது பான கடை(கள்).!


பல நாள் பட்டினிகிடந்தவன்,
பண்டிகைக்காய் காத்திருப்பதுப் போல,
சனி கிழமைக்காய் காத்திருக்கும்,
இந்திய குடிம்மக்கள்,

உள்ளே நுழைய முடியா நெரிசலுடன்,
மது பான கடை(கள்).




- எழுத்தோலை  கோ.இராம்குமார் -

நான் கடவுள்!


வாரத்தில் ஒரு நாள்,
கட்டாய கடன் வசூல்,
இன்று சனிக்கிழமை,
வாசலில் வரிசையாய்,
வறியவர்க்கூட்டம்,

நான் கடவுள்!


- எழுத்தோலை கோ.ராம்குமார் -


Friday, July 27

நடுநிசி துரத்தல்கள்!



ஆழக்கடல் நடுவில் ஆடியப்படி,
ஒற்றை பாய்மரப்படகு - துடுப்புகள்
அதன் ஆட்டத்தை கட்டுப்படுத்த,
ஆடியப்படகும் சமநிலையில், சாந்தமாய்,
போன உயிர் திரும்பியதோ அதிலிருந்த
எனக்கும், ஏரியில் கூட நீந்திடா நானும்
நடுக்கடலில், யாரும் தெரியா இருட்டில்,
யாருமற்று தத்தளிக்கிறேன் - பயம்
கவ்விய இதயத்துடன் பதறியே,
வீர்ரென கத்தி, அலறுகிறேன்,
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று!
அப்பொழுதுதான்,
ஒருக்குரல் பக்கத்திலிருந்து என்னிடம்,

என்ன கனவா? போ, போய் விபூதி எடுத்து
பூசிக்கொண்டு படு எல்லாம் போய்விடுமென்று.


நடுநிசி துரத்தல்கள்!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

செல்ல தேவதை!




சீன பெருஞ்சுவர்மேல்,
தேவதை ஓவியம்ப் போல்,
இச்சின்ன சுவற்றின் மேல்,
என் செல்ல தேவதை,
அழகாய் சிரிக்கிறாள்,
காவியம் படிக்கிறாள்,

அதுவோ அழகு!

My
Lovely Niece:  "Trisha".
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -

முற்று!


காதல் கவிதை எழுத ஏனோ
எண்ணம் வரவில்லை சில காலமாய்,
காதலிக்க யாரும், இல்லை என்பதாலா,
பழைய காதல், பாழாய்ப்போனதாலா,
பசுமை கருகும் பருவம் பக்குவமானதாலா,
எதனால் என்று என்னிடமே கேட்கிறேன்,
விளங்கா மௌனமே மிச்சம்.

என்னைக்கடந்து போனதொரு காற்றாய்,
காதலும் என் இதயமும் அதன் மௌனமும்,
முற்றும்.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

எனக்கு பசிக்கிறது!


எழுதுவதற்கு ஒரு காகிதமும்,
எழுதுக்கோலும் கொடுங்கள் போதும்,
ஜீவன் உள்ள வரையில் எழுதி, எழுதியே,
பசியாறிக்கொள்கிறேன்.

எனக்கு பசிக்கிறது!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

காசு!


ஒன்றரை வயது குழந்தைப்போல்,
ஓடியாட முடியாமல், ஓய்வும் இல்லாமல்,
ஓடி ஓடி தேடுகிறேன் பணத்தை,
கோடி கோடியாய், இல்லையென்றாலும்,
ஆயிரத்தில் வந்து, வந்த சற்று நொடிக்குள்,
காற்றைப்போல் திசைமாறி, வந்தவழியே,
கையில் ஒட்டா ஒற்றை நயா பைசாவாய்,
ஓட்டம் பிடிக்கிறது, என்ன வெறுப்போ என்மேல்

காசுக்கு?

புதுசாய் வாசமடிக்கிறது, மண்வாசனையா?
பணவாசனையா? காற்றடிப்பதாலோ ? - இந்த
முறையேனும் கதவை சாத்திவைப்பேனோ?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Thursday, July 26

நம்பிக்கை!

இல்லை, என்றோரு வார்த்தை இல்லை,
இருக்கு, இருக்கு என்று நாள்கணக்கில் இழுப்பு?
நம்பியவன் நடுத்தெருவில் நிற்கும் வரை,
இல்லை என்றோரு வார்த்தை இல்லை!

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

ஸ்ருதி!


சிரிப்பும், அழுகையும் மட்டுமே,
அன்றாட வாழக்கையாய்,
சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சி,
சிறகை முழுதாய் இன்னும்
விரிக்கவேயில்லை, அதற்குள்
தேவதையாய் சொர்க்கம் சேர்ந்து,
சோகத்திலே நம்மையெல்லாம்,
தேங்க வைத்து, தேம்பி, தேம்பி
அழவைத்து, நிஜமாய் சிரித்த நீ (ஸ்ருதி)
இன்று நிழற்ப்படத்தில் சிரிக்கிறாய்,

நியாயம் கேட்க ஒரு மணியில்லையே?
மனுநீதி ஆட்சியையும் நடக்கவில்லையே?
யாரிடம் சொல்வது, எப்படி சொல்வது,
பசுவாய் துடிக்கும் பெற்றோர் கண்ணீர்,
துடைக்க நமது கைகள், கோர்ப்பதை தவிர,
உன் ஆன்மா, சொர்கத்தில் சாந்தியடைய.







- எழுத்தோலை கோ.இராம்குமார் -

புதிதாய், தெளிவாய் இயற்கை!



புதிதாய், தெளிவாய் இயற்கை,
கலங்காலமாய் காலைகள் புலர,
எனக்கும், இவ்வுலகில் இடமிருக்கு
என்பதைப்போல், இன்றும் எனதுயிர்
என்னிடமே, உயிர்மெய் இரண்டும்
இணைப்பிரியாலே!



- எழுத்தோலை  கோ.இராம்குமார் -

ஓம் நமசிவாயா! ஓம் நமசிவாயா!!


ஒற்றைக்கல் கோபுரமாய்,
ஒருபக்கமும் நிழல்சரியா,
ஆயிரம் ஆண்டுக்காலங்கள்,
வாழ்ந்திட ஆசை, பேராசை,
என்னை செதுக்க ஒரு சோழன்,
இல்லையே பிரகதீஸ்வரா,
ஏழை என், கோரிக்கையெல்லாம்,
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திட அல்ல,
அடுத்த நொடியை கடந்திடவே,

சிவ, சிவ சிவக்கும் கண்களுடன்,
துடிக்கும் என் நெஞ்சமும்,
நொடிக்கும் நாளில் எல்லாம்,
நினைக்கும் உன் பெயரை,
நொடிக்கு ஒரு முறை துதித்தாலும்,
திரும்பா உன்னருள் ததும்பா,
திகைத்து நிற்கிறேன் நிர்க்கதியாய்,
உன் வாசலில்,

நெற்றிக்கண் திறக்க வேண்டாம்,
உன் ஓரக்கண் பார்வையே போதும்,

ஓம் நமசிவாயா! ஓம் நமசிவாயா!!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

பொய் சொல்லும் கண்கள்!


கண்களும் பொய் சொல்லுமாம்
கேட்டிருக்கிறேன், பார்த்ததில்லை
கருவிழி, அதன்வழி, புகும்வழி
அதனுள் ஊடுருவி ப்பார்க்கிறேன்,
உற்றுப்பார்க்கிறேன், புன்னகையுடன்
திரும்பி நடக்கிறேன்,

கண்களுக்குள் கவிதை,
உவமைகளும், சிலேடைகளும்,
எதுகைகளும், மோனைகளும்
இலக்கண, இலக்கிய மொத்தமமும்,
அவள் கண்களில் பொய்களாய்,
அகம் அமர்ந்திருந்ததே, ஆச்சர்யம்,

மணக்கும் தமிழ், மயக்கியதென்னை,
அவள் விழிகளில் அது சொல்லும் பொய்களில்.





- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Photo Courtesy: Falcon Designers!

தமிழ் ஊற்று!


கோட்டான்களும் கொட்டாவி
விடும் நடுநிசியில் - நானும்
என் பேனாவும் ஒருவருக்கொருவர்,
துணையாய் இறுக க்கைப்பிடிதே,
இருட்டிலோர் கவிதை வடிக்கிறோம்...

யாருமற்ற தனிமையிலும் இனிமை,
தமிழ் ஊற்றில் நீர்ப்பருகுவதால்.




- எழுத்தோலை கோ.இராம்குமார் -

வெளிச்சம்!


வெளிச்சம் மங்கி இருளதொடங்கியதும் - புது
வெளிச்சம் என் மேல் படர்வதை உணர்கிறேன் - அது
முழுமதியோ இல்லை என்னவள் பார்வதியோ?

அவள் பார்வையில் ஒளிருது ஒற்றை வெண்ணிலவு!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

அசைந்தாடும் ஆசைகள்!

மடித்த விரல்கள்
விரிக்கும் நொடியில்,
சிரிக்கும் உனது
சிவந்த உதடுகளை,
கிள்ளி, சுருக்க
முயல்கிறேன்,
முந்தானை என்
முயற்சிகளை
முறியடிக்கிறது,
முக்காடை கொஞ்சம்
இறக்கி வையடி,
கொஞ்சம் கொத்தி,
ஒத்திக்கொள்கிறேன்,

கோவை கொடியில்,

அசைந்தாடும்  என்னாசைகள்.

-  எழுத்தோலை கோ.இராம்குமார் -

Wednesday, July 25

விதிவிலக்கு!



முடிந்து போன இரவுகளில் - வடிந்து
முடிந்த மழையதுவும், இலைகளிலும்,
மலர்களிலுமாய் சிறு, சிறு துளிகளாய்
சிரித்திட, சினுங்கிடும் குருவிகளோடு,
கொஞ்சி விளையாடும் சித்தெரும்புகள்,
மரணத்தை மறந்த மகாத்மாக்களாய்
மாண்டுமடிய, காலையுணவை கழித்து,
கரைந்த உணவும் கலக்க, கழியத் தேடிய
கழிவறைகளாய் மகான்களின் சிலைகளும்
எழிலிழந்து, காத்துவாங்கி கொண்டிருக்கும்
தெருக்களாய் கடற்க்கரை சாலைகளும்,
முக்கிய சந்திப்பு வளையங்களும்.

இயற்கையின் விதி, தலைவர்களுக்கு - மட்டும்
என்ன விதிவிலக்கா?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

மெட்டுக்கு என் பாட்டு! (விழிகளிலே விழிகளிலே, குள்ளநரிக்கூட்டம்)




விழிகளிலே உன் விழிகளிலே,
எனக்கொரு கவிதை நீ சொன்னாய்,
வரிகளிலே அதன் வரிகளிலே,
எதுகையாய் என்னையும் நீ கோர்த்தாய்,
சொல்லாத கவிதையாய் அது இனித்ததே,
இன்னிசை சேராமாலே சுகம் சேர்த்ததே....

(விழிகளிலே ...........)

விண்ணுக்குள் என்னை நட்டு நீரூற்றினாய்,
விண்ணுக்குள் என்னை நட்டு நீரூற்றினாய்,
கண்களில் காதல் கொடி பறக்குது உயர்ந்து,
எனக்கிது இதுநாள் தெரியவும் இல்லை,
இருட்டில் கிடந்ததெந்தன் உயிரும்,
புரியுது, புரியுது புலம்பலை நிறுத்து,
உனக்கென பூத்திருக்கும் பூவுமிது புதுசு,
சொல்லாமல் இருந்திட்டால் சொர்க்கத்தில்
இடமில்லை, சொல்லிட வந்துவிட்டேன்
வந்துவிடு என்னுடனே.

(விழிகளிலே ...........)

சொல்லுக்குள் எண்ணெய் விட்டு சூடேற்றினாய்,
சொல்லுக்குள் எண்ணெய் விட்டு சூடேற்றினாய்,
சொந்தமெல்லாம் உதறிவிட்டு வர தோன்றுதே,
இதயமும் துடிப்பது இசைப்போல் இருக்கு,
உள்ளுக்குள்ள நீயிருக்க நிஜமாய் கிறுக்கு,
உன்முகம், முகமது நான் காண்கையிலே,
இலக்கண இலக்கியம் உயிர்க்கொள்ளுதே,
சொல்லாமல் இருந்திட்டால் சொர்க்கத்தில்
இடமில்லை, சொல்லிட வந்துவிட்டேன்
வந்துவிடு என்னுடனே.

விழிகளிலே உன் விழிகளிலே,
எனக்கொரு கவிதை நீ சொன்னாய்,
வரிகளிலே அதன் வரிகளிலே,
எதுகையாய் என்னையும் நீ கோர்த்தாய்,
சொல்லாத கவிதையாய் அது இனித்ததே,
இன்னிசை சேராமாலே சுகம் சேர்த்ததே,



(விழிகளிலே ...........)



- எழுத்தோலை கோ.இராம்குமார் -
Photo Courtesy: Google!

கிரகணம்!




நெருப்பாய் காயும் சூரியனும்,
காதல்க்கொள்ள நெருங்கும் நிலவும்,
எதிர் எதிரே வரவே பிடிக்குமாம் கிரகணம்,
தழுவி திளைத்து நீங்கும் நொடியில்,
எத்தனை விசித்திரம் வானவெளி மாளிகையில்.

நெருப்பாய் என்னை தழுவு பெண்ணிலவே,
கிரகணம் நமக்குள் நடக்குமா பார்க்கலாம்.
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -
 
Photo Courtesy: Google!

பேசும் ஓவியம்




மௌனம் கலைந்திருந்த,
மேகமாய் கார்வண்ணம்,
உன்க்கூந்தல் காற்றில் பறந்திட,
அதைக்கோதும் உன்விரலினிலே,
வண்ணம் தோய்த்து வரைந்திட்ட
ஓவியமாய் உன் முகம், பேசிடும்
பெண் சிலையாய் என்னிடம் பேச,
எதோ பேச நானும் இசைந்தேன்,
இளையவளே, இம்சை செய்வதை
நிறுத்துக் கொஞ்சம், உன் கண்ணசைவில்
கரைந்துபோகும் மண் சிலையாய்,
உன் இதழசைவின் கோணம் கண்டு
இன்பமும், துன்பமும் இரண்டுமே
நீயென, நினைவில் நிறைந்து,
நிதம்நிதம் கனவில் திளைக்கிறேன்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -
 
Photo Courtesy: Google!

மாநகர இளங்குமரிகள்!



முகம்மறைத்த முல்லைக்கொடிகள்,
தலைமுதல், கால்வரை கண்ணைமட்டும் விட்டு,
கண்ணாடியணிந்து, காற்றுடன் ஆடியே,
கமகம வாசம்பரப்பி,
விசையுந்தில் வேகமாய்,
வீதிகள் வாய்ப்பிளக்க வழிப்போகும்,
கொள்ளைக்கூட்ட தலைவிகளோ.

மாநகர இளங்குமரிகள்!




- எழுத்தோலை கோ.இராம்குமார் -


Photo Courtesy: Google!

Monday, July 23

நாடோடி!


நாடி, நாடி நானுமானேனோ நாடோடி,
வீடோடோடி, கடோடோடி கடைசியாய்,
விற்காமல் நின்ற விறகாய் மாறி,
அதை எரிக்க கிடைக்கும் கரியாய் கருகி,
அதை பொடிக்க பறக்கும் கரும்புகையாய் பரவி,
அது கலக்கும் காற்றாய் கண்ணை விட்டே மறைவேனோ,

மறுஜென்மம் என்றொன்றிருந்தால் அதிலும் -
இதுவோ, மறுபடியும்!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Sunday, July 22

பூஜைகேத்த பூத்தேடி!

 
 
காற்றோடு மிதக்கும் இலையாய்,
என் கண்ணோடு மிதக்கும் உன் நிழலாலே,
பெண்ணோடு உன்னை ஒப்பிட முடியவில்லை,
தேவதைகள் கூட்டத்திற்கு தலைமை நீ தங்குவதால்,
உன்னோடு உன்னையே ஒப்பிட்டு பார்க்கிறேன்,
உன்னைவிட அழகிய பெண்ணில்லை என்பதால்,

அழகிய அற்புதமே, ஆயிரம் பூக்களின் அர்த்தமே,
இருட்டில் தேடிய மெழுகுவர்த்தியாய் முழிப்பிதுங்கி,
தடவி, தடவிப் பார்க்கிறேன், தாவணி குமரி உன்
தேகமும் மெழுகினால் செய்ததோ என்னவோ?
இத்தனை வழுக்கல்கள், எத்தனை சறுக்கல்கள்,
சலவைக்கல் சலவையாய் என்னுள் சலசலப்பு சத்தமே,
மெல்லிய சலனமாய் கேட்கிறதே,

ஓடையாய் ஓடி ஒரு நிமிடமும் நில்லாது,
உன் நிலலதுப்போல் தொடர்கிறேன்,
ஓரக்கண் பார்வை வீசு, ஓரமாய் நின்னு பேசு,
பேருலகம் போல் உனையே நிற்காமல் சுழல்கிறேன்,
இருண்டு ஒளிவீசும் பகலிரவு கணக்காய்,
பசித்தூக்கம் மறந்து, பூஜைக்காய் காத்திருக்கும்
கடவுளைப்போல, கடவுளுக்காய் காத்திருக்கும்
பக்கதன் நானே!

- எழுத்தோலை கோ.இராம்குமார் -