Monday, May 6

நானும் மனிதனா?.

Apr` 21

எதிர் நீச்சலிடும் மீன்க்குஞ்சியாய் 
முந்திட முனைகிறேன்,
காலம் என்னை எஞ்சிய 
மீன் முள்ளாய் உறிஞ்சியே 
துப்பியதே - கிடக்கிறேன் 
குப்பைகள் சூழ்ந்திட்ட தொட்டியில் 
கூட்டத்தில் நக்கிடும் 
நாயதன் நாவினில் - ஒட்டியும் 
ஒட்டாமலும், 
இரத்த கசிவை சிந்தியும்
சிந்தாமலும்,
துடைத்திட ஒழுகும்
அதுவும் என்னையும் பார்த்தே
ஏதேதோ கேட்கிறதே,


எழுத்தோலை!

புத்தம் புது மொழி!

Apr` 19

புத்தம் புது மொழி ஒன்றில் 
நித்தமும் எழுத நினைத்தேன் 
காதல் கவிதை புதிதாய்,
ஓசையில் பிறக்கும் 
ஒவ்வொரு மொழியும் 
ஓசையின்றி சிரித்தது, 
என்னையும் பார்த்தே ஏளனமாய்,
ஏன் இந்த விபரீதம் 
என்னையும் அறியாமலே 
கேட்கிறேன்,

ஏனடி இந்த வேதனை ?
போதும் என்றும்,
வேண்டும் என்றே
மீண்டும் மீண்டும்
கொல்லும் பார்வை
அதுவும் எதுவோ, ஏனோ
என்னிடம் கேட்காமலே
கேளிக்கை வேடிக்கை காட்டும்
கோமாளியாய் மாற்றியே
மாய்ந்து மாய்ந்து
ஓய்ந்துப் போகா
ஒவ்வொரு நொடியும்
ஓசையின்றி
புதைக்கின்றதே.


எழுத்தோலை!

ஓய்வின்றி எழுகிறதே!

Apr` 18

முற்றும் போட்டும் 
முடியாத தொடர்க்கதையா,
முடிவில்லா தொடு வானமா,
காதல்,
மறந்தும் துரத்தல்கள்
விரும்பிடினும் தொடர்வதேன்,
வலி,
துளி துளியாய் துளிர்த்தே,
விரிந்த கடல்ப்போல்,
எண்ணிலா எண்ணங்களை,
நினைவுகளாய் அலைப்போல்
ஓய்வின்றி எழுகிறதே.
காதல்.


எழுத்தோலை!

கல்லறை மைதானமாய்!

Apr` 18

உறங்கிப் போக 
நெருங்கியப் படுக்கை,
நெடுங்கால தனிமையில்
நெருங்கி வர யாருமின்றி,
சருகாய்ப் போன மலர்கள் மட்டும்
அங்குமிங்கும் ஒன்றை விட்டு 
ஒன்று விலகி,
மயிர் பொசுங்கும் வாசனையை -
மட்டும் நினைவுப்படுத்தும்
கல்லறை மைதானமாய் தெரிகிறதே.


எழுத்தோலை!

இல்லாமலே முடியுமோ!

Apr` 15

என்னிடம் எதுவும் 
இல்லை என்றவன்,
ஏனோ - எழுத்தினில் 
ஏழ்மை கொண்டே 
வடித்திடும் கவிதைகள் 
எல்லாம்,
எல்லாம் இருப்பதுப் போல் 
இருந்தும் - எதுவும் 
இல்லாமலே முடியுமோ.


எழுத்தோலை!

எதிரொலிக்கிறதே!

Apr` 12

நொடிநேர மின்னலப் போல் - என் 
கண்ணில் பட்டு மறைந்தாலும்,
தொடுவானா மேகம் ப்போல் 
தொட்டுவிட்டு சென்றாலும்,
உன் முகம் மட்டும் என்னுள்ளே 
இன்னும் சுற்றித் திரிகிறதே,

மின்னலும், மேகமும் - உன் 
கண்களின் பிம்பமோ?
பிரதிப்பளிப்பாய் தினம், தினம்
என்னுள்ளே எதிரொலிக்கிறதே.


எழுத்தோலை!

சிரிக்கவில்லை!

Apr` 05

முதன் முதலாய் 
முடியாத பின்னலாய்
சிக்கிய நெஞ்சம் 
சிரிக்கவில்லை இன்னும்,

கிறுக்கி கொண்டிருக்கிறேன் 
பொருக்கி, பொருக்கி 
செந்தமிழில் உள்ள எழுத்துக்களை 
நாளும்,
கவிதை எழுத தெரியாத
நானும்,
கண்கள் குருடாய்
ஆனவன்ப் போல் தேடித் தேடியே,

முதன் முதலாய்
முடியாத பின்னலாய்
சிக்கிய நெஞ்சம்
சிரிக்கவில்லை இன்னும்,

தெரியவில்லை பெண்ணே,
அனுதினம் தேடியும்,
அரைமனதுடன் உண்டும்,
உறங்கியும்,
உளரும் எனது இருதயம்
சொல்லும்,
ஒருவரியும் கூட உன்ப் பெயராய்
இருப்பதைத் தவிர, எதையும்,

முதன் முதலாய்
முடியாத பின்னலாய்
சிக்கிய நெஞ்சம்
சிரிக்கவில்லை இன்னும்.


எழுத்தோலை!

பதிலாய் நீயும்?

Apr` 05

நீ வருவாயென 
காத்திருக்கிறேன் தினம் இரவில்,
குளிர் படர்ந்த நிலவொளியினில்,
வெகுநாட்களாய் தனிமையில்,

கிழக்கே நுழைந்த நிலவும், 
மேற்கில் புதைய தொடங்க,
விடிந்தது வானமும்,
புலப்படா கேள்வியுடன்
நான் இன்னும் இருளிலே,
வருவாயோ பதிலாய் நீயும்?


எழுத்தோலை!

கருவிழி போலவே!

Apr` 05

நிஜமும், நிலவும், நீயும் 
தூய்மையின் பிரதிபலிப்போ,
அசுத்தமான உலகில் நீங்கள்
நிசப்த்தம்ப் போல் எங்கே மறைந்தீர்?

தேடினேன், ஓடினேன், வாடினேன் 
நானும் நீல வானும் 
ஒன்றாய்,
ஓய்வின்றி,

கலைந்த மேகமாய்
நெஞ்சம் கலங்கியதே
மிச்சமோ?
கண்மணி கருவிழி போலவே.


எழுத்தோலை!

பொய் பாசம்!

Apr` 05

என்னவளும் இல்லா உலகில் 
நிலவு மட்டும் எதற்கு?
பிள்ளைகளுக்கு பால் சோறு 
ஊட்டவா?
அல்லிகளை பூத்து சிரிக்க 
வைக்கவா?

போதும் நிறுத்து, 
வேண்டாம் உன் பொய் பாசம்,
கலையட்டும் உனது வேஷம்,
ஓடிடு, மேகத்துள் ஒளிந்துகொள்,

என் கண்ணில் மட்டும்
கொஞ்சமும் பட்டுவிடாதே.


எழுத்தோலை!

கம்பனின் வம்சமோ!

Apr` 05

அது ஏனோ தெரியவில்லை,
உன்னை நினைக்கும் நொடிகலெல்லாம்
என் எழுத்தாணியின் மை
தானே கசிகிறது,
ஏதேதோ கிறுக்கி
கவிதை என்கிறது,

ஏனடி, நீயுமென்ன
கம்பனின் வம்சமோ,
உன் கண்களில் வரிகள் கொடுத்தே,
என்னையும் கவிஞசனாக்குகிறாய்.

எழுத்தோலை!

முகவரி தொலைக்க!

Apr` 04

நேற்று வந்த நீயும்
ஒன்றை மறந்தே சென்றுவிட்டாய்,
இன்றும் வா மறந்ததை
முதலிலிருந்து தொடங்கிட,

உறங்கப் போகிறேன், 
கண்கள் வாசற்ப் படியில்,
வலதுக் காலை 
எடுத்து வைத்து வா,

மெத்தையும் தயார்,

மொத்தமாய் முகவரி தொலைக்க,
நீ திரும்ப போகாதிருக்க.


எழுத்தோலை!

வெல்வாயா?

Apr` 04

மயிலிறகால் வருடியதுப்போல்,
உன் ஒவ்வொரு வார்த்தையும்
சிலிர்த்ததடி,
சிறுவண்டும் தேன்ப்பூவை
தேடுவதுப் போல் த்தேடியே,
உன்னிடம் ஓடிவந்தேன் நானும்,

மானே - உன்
மாமன் நானே என்றொரு 
வார்த்தை உதிர்த்தால் போதும்,
வற்றிய ஆற்றிலும் வெள்ளம் வரும்
அதுவும் என் உள்ளமுமாகும்,

சொல்வாயா - எனை
வெல்வாயா?


எழுத்தோலை!

அணுவணுவாய்!

Apr` 04

சத்தமின்றி நான் சாகிறேன்,
இரத்தமும் வழிந்திடா,
கயிறும் முடியிடா,
உரக்க மருந்தும் உண்டிடா,

இது தற்கொலை அல்ல,
திட்டமிட்ட கொலை,
என்னை நித்தம் நித்தம்
துன்புறுத்தி,
அக்கம், பக்கம் யாரும்
அறிந்திடா,
உன் மௌனத்தால் என்னை
அணுவணுவாய் கொல்கிறாய்
போதும்.



எழுத்தோலை!

விசைப்படகாய்!

Mar` 27

மின்னலாய் நீ வந்துப் போனதும்
தென்றலும் என்னை தழுவிக்கொண்டதே
அன்னமே என்மேல் இன்னும் கோவமா,
ஜென்னலடைத்துப் போவதுதான்
உந்தன் ஞாயமா?
கண்கள் இரண்டும் பூத்ததடி
உனைக் காணாமலே
வந்தவழி திரும்பி விட்டேன்
வேலையேதும் முடியாமலே,

நீயில்லாமல் நானும்
உமிப்போலவே ஆனேனே,
திசையறியாமல் நாளும்
விசைப்படகாய் ஆனேனே.


எழுத்தோலை!

இலையுதிர்க் காலம்!

Mar`23

ஒற்றை வார்த்தை 
உதிர்ந்திட தானே,
இலையுதிர்க்காலம் வரை 
காத்திருத்தலும் நன்றே ,

கண்ணால் பேசும் அவளின்,
இமை மயிர் இலையாய் உதிர,
கண்ணாடி பிம்பம் அவளை
என் முன்னாடி சேர்த்திட்ட நொடியில்,

இலையுதிர்க் காலமும்,
என்னுள்ளே தொடங்கிடுமோ?

எழுத்தோலை!

எட்டிப் பார்த்தாலே போதுமே!


நித்தமும் சுற்றி வரும் நிலவும்,
ஒர்நாளே ஓய்வெடுத்து உறங்கும்,
அழகே, நீயும் நிலவில்லையா,
எத்தனைநாள் உன்னை தேடுவது,

பித்தனைப்போல் நானும் ஆனேனே,
முழுதாய் ஒளிவீச வேண்டாமே,
ஒளிந்து, எட்டிப் பார்த்தாலே போதுமே,
சிலகாலம் வாழ்ந்திடுவேன் நானுமே.

எழுத்தோலை!

அவதானிப்பு!

Mar`23

இதுவும் கடந்துபோகும்,
ஓர்நாள் முகநூலும் மடிந்துபோகும்,
அந்நாள் விரைவில் வந்தால் போதும்,
எல்லோர்க்கும் அவரவர் வாழ்க்கை கிட்டும்,

எழுத்தோலை!

Sunday, April 28

வாழ்த்த வாருங்கள் நண்பர்களே!

Mar`20

எனது அன்பு நண்பர் திரு. முகமது மீரா 
அவர்கள் நாளை இல்லறத்தில் இணையவிருக்கிறார்,
அவரை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே,
------------------------------------------------------------
மணமக்கள் : முகமது மீரா - பர்சத் நிஸா 
------------------------------------------------------------
நாள் : 21.03.2013
-------------------------------------------------------------

அகலிடம் அலம்ப,
நபிகள்(ஸல்) ஆணைக்கிணங்க,
அச்சாரமிடும் நன்னாளாம்,
அன்பினை அறத்தினை என்றும்
அவிதல் நன்றாம்,
அருள்நெறி அற்றா அறிந்து
ஆய்வளை ஐயள் கரம் பற்று,
எழிலி திரளும்,
காந்தள் தூவும்,
இயல்பை மறந்தே
இதயம் இணையும்,

இல்வாழ்க்கை தொடங்கும்,
இனிக்கும் கனிப்போல் சுவைக்கும்,
நாளென்றும் நன்னாளாய் மணக்கும்,
திகட்டும் அளவும் நெருங்கும்,
திகையா, அடங்கா, நிறையா - நீவீர்
குறையா, மதியாய், ஒளியாய் வீச
புதிதாய் உங்கள் உருவாய், அருளாய்
பெறுவீர் ஒன்றாய், இரண்டாய்
மக்கட்செல்வம் அழகாய்,

முகமது மீரா, முகமது மீரா - உன்
முகம் அது மிளிர, அகம் கூட குளிர - நீ
நிதம் கண்ட கனவெல்லாம்,
நிஜமாக்கி உன்னை சேர,
தரையிறங்கி வரும் நிலவேதான்
நிஸா என்னும் நிறைமதியோ?

இன்ஷா அல்லாஹ்
இனியெல்லாம் சுகமே,
சுப்ஹான் அல்லாஹ்
வாழ்வெல்லாம் வசந்தமே,
வாழ்த்துகள், வாழ்த்துகள்
என், இனிய நிக்காஹ்
வாழ்த்துக்கள்.


எழுத்தோலை!

புது வாழ்வை!

Mar`20

என்றாவது ஒரு நாள்
நீ என்னிடம் வருவாய் என்றே,
நுனிப்புல் மீதுள்ள 
பனித்துளிகளை சேகரிக்கிறேன்,
அம்மன் சிலை அபிசேகம் செய்து 
வேண்டிக்கொள்கிறேன்,

ஆண்டாள் பாக்கள் தழுவி
தினம் ஒரு பாடல் வடிக்கிறேன்,
ஆழக்கடல் மூழ்கி, தேடித்தேடி
முத்துக்களை சேர்க்கிறேன்,
சொத்தாம் நீ எனக்கு என்றும்
அழியாதிருக்க,
இதயக்கூட்டில் பொக்கிசமாய்
பாதுக்காக்கிறேன்.

வந்துவிடு தமிழ் மகளே,
தரணியெங்கும் சென்றிடலாம்,
தனித்தீவை தேடித் பிடித்து,
புது வாழ்வைத் தொடங்கிடலாம்.

எழுத்தோலை!

ஜெயந்தி, தோழிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Mar`20

நிலமகள் நீர்நிலைகள் 
மலையழகை எல்லாம்,
மாற்றம் ஏதுமின்றி 
மங்கா தாங்கும் எங்கள்
மருமகளே,
சீனத் தாய் வயிற்றில் பிறந்தும்
சீனியாய் தமிழ் பேசி,
சித்திரமாய் ஒளி வீசி,
ஜெயந்தியாய் வலம் வரும்
திருமகளே,

மலாய் நீக்கிய பாலின்
சுவை அதுவாய்
மலாய் மொழி நீ
பேசிட நிறைக்கும்,
நிலவு அழகை
கவிதைகளால் பாட,
தமிழ் மொழியில் நீ
எழுதிட சிலிர்க்கும்,

அன்பினை அடைக்காக்கும்
கோழியதன் இறகாய் - நீ
எங்களை காக்கும்
ஒவ்வொரு நொடியும்,
சுகத்தினில் பொரிந்தோம்
உள்ளுர உறைந்தே,

உன்னை வாழ்த்த
வாயெடுத்த போதெல்லாம் - என்
போதாத காலம் எனை - ஏதும்
எழுதிட விடவில்லை,
மாறும் காலங்கள் எல்லாம்
மாற்றம் ஒன்றையே
நிலையாய் தாங்கி,
ஏற்ற, இறக்க வாழ்க்கையையே
தந்திடவே - என்
என்னத் திவலைகள் எல்லாம்
கிண்ணத் தண்ணீரிலே
மூழ்கியதே,

மன்னித்துவிடு தோழியே,
மன்னித்தேன் எனும் ஒற்றை
வார்த்தை சொல்லிவிடு,
காலம் தாழ்த்திய என் வாழ்த்துக்கள்
இதுவோ உனக்கான எனது
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எழுத்தோலை!

கடலெனும் வாழ்வில்!

Mar`16

இதழ்களை நெருங்கியத் தருணம்,
நீ உதறிய பொழுதில் அறிந்தேன்,
ஒட்டாது இந்த இதழ்கள்,
என்றும்,

ஓடாத நதிகள் போலே,
சேராத கடலெனும் வாழ்வில்.


எழுத்தோலை!

எழிலி!

Mar`16

எழிலி திரண்டு,
இடைவிடா உருண்டு, 
என்னிடம் சேர்த்ததே 
பொழியும் மழையை - அதுவும் 
என் சிரமதனை நனைக்க,
பரவும் குளிர் ஊடே 
யாரோ புகுத்தியது - உன்
உருவை, இறந்தேன்
அக்கணமே நானும்,
உன் திருவாய் ஒரு
மொழி சொல்லிடை என்
செவி புக மீண்டும்
பிழைத்தேன் உயிர் - அதுவும்,
உன்னால் உந்தன் பின்னால்
நிழலாய் தொடர்கிறதே,
இருளினுள் நுழையாதே கண்ணே,
வாழ்ந்திட ஆசை
கொல்லாதே, வேண்டும்
இவ்வாழ்வும், அதுவும் உன்னோடு
மட்டும் இருந்திட வேண்டுமே,

வெண்ணிலவே என் பெண்ணிலவே.

( எழிலி = மேகம் )

எழுத்தோலை!

வெண்ணிற தேனோ?

Mar`15

சிற்பமாய் உன் வடிவை 
செதுக்கிய உளியாய் என் இதழ்கள்,
கொங்கைகள் இரண்டின் மீதே 
ஓய்வினை எடுக்கிறது,
சுற்றி, சுற்றி செதுக்கியதில்
தாகம் அதுவும் எடுத்திடுமோ,
அதனால் அதுவும், அங்கயே பருகிடுமோ,

நீரோ அதுவும்,
வெண்ணிற தேனோ?

எழுத்தோலை!

அவளும்!

Mar`15

இருட்டினில் உருட்டிடும் 
குருட்டுப் பூனையாய் 
நானும்,
விழுந்து நெளிந்து 
சத்தமாய் சினுங்கிடும்,
சிற்பமாய்,

அவளும்.