செஞ்சிவப்பு, மஞ்சள் கூட்டாய்
வண்ணத்துடன் கமழும் வாசம்,
வைகறையின் வழிகள் நடுவே
வளர்ந்து கிடந்த ரோஜா மலரே !
வாசனை உன் வாசனையில் தான்,
எத்தனை ரகம், ராகமாய்?
கோவிலில் கடவுள் வாசம்
பெண்ணிடம் ஆசை வாசம்
சாவினில் சோக வாசம்
செடியினில் பூத்த வாசம்
உன்னை கொடுத்து அவளிடம் சொன்னேன்,
உன்னைவிட அவள் அழகென்று...
நீயோ முறைத்தாய், அவளோ ரசித்தாள்,
நான் சொன்னது பொய் என்று புரியாமல் !
:::: இராம்குமார் கோபால் ::::