Thursday, March 22

கொள்ளை !


இளவேனிற்காலம்,
இது அதிகாலை நேரம்,
தங்கம், வெள்ளியினை
சேர்த்தே காய்ச்சி,
உருக்கி, வார்க்க,
வழிந்தோடும் பொன்னிறம் -
பரவிய வானை காணயிலே,

கொள்ளை முயற்சி !!



:::: கோ.இராம்குமார் ::::

குற்ற்றவாளி !


குற்றவாளி ஆகா
எனக்கும் விருப்பமே - நீ!
உன், கண்களிலென்னை
கைது செய்வாய் எனில்!

:::: கோ இராம்குமார் ::::


நகைப்பு !



எண்ண கடலில் மூழ்கி,
வண்ண வரிகள் கோர்த்தே,
வரைந்தேன் சில பல கவிதைகள்.

படித்தவர் வியந்தனர்,
பார்த்தவர் ரசித்தனர்,
எழுதிய நானோ நகைத்தேன்,

நானும் ஒரு கவிஞ்சனா என்று !!

------ :::: கோ.இராம்குமார் :::: ........

உலக கவிஞர் தின வாழ்த்துக்கள்,
உலக கவிஞர்கள் அனைவருக்கும் .........


Sunday, March 18

உழவன்!





செந்தணல் ச்சூரியன்,
சித்திரையின் மத்தியிலே,
உச்சத்தின் உக்கிரமாய்,
உருக்கி வார்க்கும்,
தீ க்குழம்பாம், செங்கதிரால்!

ஒழுகி வழிந்திடும்,
வியர்வை அலைகளை,
துடைக்க இயலாது,
உழவனின் க்கைகளதும்,
கைதியாய் சிக்கியதோ!
சேற்றதன் காவலிலே!!

வானம் பார்த்த பூமியதில்,
வரம் கேட்டு வானம் ப்பார்தான்,
வருணனவன் வருகை வேண்டி.
வற்றிவரும் நீர்நிலைகள்,
வறண்டு விடும் நிலைன்நோக்க,
நட்டு வைத்த, நஞ்சை!, புஞ்சை!!
பூபெய்தும் நாள்நெருங்க,
வாய்க்காலில் நீரின்றி,
வாடிடுமோ ! நெல்க்கதிரும் ?
வாங்கிவைத்த கடனதுவும்,
அடகுவைத்த நகையதுவும் - இந்த,
அறுவடையில் அடைதிடவே,
எண்ணி உழைக்கும்,
ஏழை உழவன் -கனவும்,
நீரின்றி, நிறை பெறுமோ ?

நீரின்றி அமையா இவ்வுலகத்தில் - தண்
நீர்வேண்டி அலையும், உழவன் !
நிலைகெட்ட காலத்தில் - நிம்மதியை,
தொலைத்த தேடலில் அவனும்,
வருமென்று! தவம்கிடந்து!!
வானம்பார்த்து நின்றிருந்தான்.

சித்திரையின் சீற்றத்தில்,
ஞாயிரதன் நாவும் கூட,
வற்றியதோ! என்னவோ!!
வானம் கூட வறண்டு போயிட்ட்ரே !

:::: இராம்குமார் கோபால் :::::

சுகம் !




பிரியமானவளே !

உன்னை பார்த்தப்பொழுது,
என்னை நான் மறந்தேன்.
பனிக்குள் புதைந்த மலரைப்போல்,
உனக்குள் நானும் உறைந்தேன்.
உனக்குள் இருக்க எனக்கென்றும் -
பிரியமே! பிரியாமல் எனை, என்றும்
உன்னுள் வைத்திருப்பாயோ ?

காதலெனும் கவிப்பாட,
கவிஞ்சனாய் நானுண்டு.
காவியமே உனைப்பாட, எப்
புலவன் இங்குண்டு ?
கற்கண்டாய் நீ இருக்க,
கொம்ப்புத்தேன் எதற்கு ?
செந்தமிழின் பழமைப்போல்,
மாறாத உன்னழகே, தனிச்சிறப்பு.

மதியதன் ஒளியின்றி,
அல்லிம்மலர் மலர்ந்திடுமோ ?
என்னவளே ! நீயுமின்றி - என்
இதயமும், இயங்கிடுமோ ?
உனைக்காணமல் என் கண்ணிருப்பது,
கடலில்லா உலகம்த்தானோ ?
நீ! என்னை காணாமல் செல்வது,
இதயம்ப்பிரிந்த உடலாம், நானோ ?

என்னிதயத்தை, உன்னுயிரோடு இணைத்துவிடு!
உன்க்காதலை, எனக்கே கொடுத்துவிடு!
உயிரோடு உயிராக கலந்து,
காலமெல்லாம் காதலித்து,
திருமண, நறுமணம் நுகர்ந்து,
நூற்றாண்டுக்காலம் வாழ்ந்திடுவோம்,
நிறைவில்லா ச்சுகம் அடைந்திடுவோம் !!

:::: இராம்குமார் கோபால் :::::



Online Casino Australia Online Casino Casino Online Grand reef casino Casino Mate

எழுந்தருள்வாய்! அன்னப்பறவையே !!



கொஞ்சும் கிளிகளும்,
பாடிடும் வானம்பாடியும்,
பறந்திடும் பறவைகளுமாய் சேர்ந்து,
கூவிடும் குயிலிடம் சொன்னது -
மயிலாய் நடப்பவள்,
மலராய் மணப்பவள்,
நிலவாய் சிரிப்பவள்,
நித்திரையில் இருக்கின்றாள்.
இரவும் மறையவே,
பகலவன் வந்துவிட்டான்,
உன் கூவலில் அவளை,
கூவியே எழுப்பிடென்று !

இதைக்கேட்ட நானும், குயிலாய் !
என் கவிதையில் கூவுகிறேன்,
மடந்தை பெண்ணே!
மாந்தளிர் கண்ணே!!
மருதாணி சிவப்பாய் - நீ
சிரிப்பதை கேட்க்க,
காத்திருக்கும் -
கிளி,
குருவி,
வானம்பாடி, பறவைகளெல்லாம்,
நேற்றிரவை கடந்து,
கனவில் மிதந்து,
கால் கடுக்க நிர்ப்பதைப்பார் -
உன்னை, ச்சரனடையவே.

எழுந்தருள்வாய்! அன்னப்பறவையே !!

:::: இராம்குமார் கோபால் :::::







Online Casino Australia Online Casino Casino Online Grand reef casino Casino Mate

தாலாட்டு !




பெண்ணிலவை தூங்கவைக்க,
தாலாட்டு பாடல் பாட எண்ணி,
உவமைகள், தேடி பறக்கிறேன்,
சிந்தனை வானில்,
வற்றாத கடலில்,
பைந்தமிழ் மொழியில்.

அரிதான முத்துப்போல்.
அறியாத குழந்தைப்போல்,
அழகான உன்னைப்போல்.

எங்குமே இல்லை, அன்பே!
என்ச்செயவ்வேன் நானும், இனியும். ?

:::: இராம்குமார் கோபால் ::::




மூன்றே வார்த்தை, மூச்சாய்யானதே !




முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!
முனி முனி முனியம்மா !
மூனே, மூணு வார்த்தை சொல்லம்மா !!

முதல் வார்த்தை முன்ம்மொழிவாய்,
மெய்ப்பொருளாய், உன் உருவாய். ( i )
இரெண்டாம் வார்த்தை இதயவளைவாய்,
காதல் சின்னமாய், கவியின் பந்தமாய். ( love )
மூன்றாம் வார்த்தை, நானே என்பாய் - பின்
நகைப்பாய், அழகாய் சொல்லி ம்முடிப்பாய். ( you )

முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!
முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!

ஏனோ! ஏனோ! வெட்கம் உன்க்கண்ணில்,
வாழ்வோச்சாவோ, நானென்றும் உன்னில் - உன்,
மூன்றே வார்த்தை, என் மூச்சாய் ஆனதே !
முழுமதியும், பிறைநிலவாய் தேயுதே !
நிலவை பிரிந்த வானமாய் என்னை,
தனிமையில் தவிக்க வைததுப்போதும்,
வந்துவிடு முனியம்மா, வாழ்வொன்றை தொடங்கிடுவோம்!!


முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!
முனி முனி முனியம்மா !
மூனே, மூணு வார்த்தை சொல்லம்மா !!




::::: இராம்குமார் கோபால் ::::::



Saturday, March 17

புன்னகை !




சில்லென்ற - காற்றும்,
மலராத மலரத்தான் - வாசமும்,
ஓடோடி நிற்காத - மேகமும்,
சிரிக்காமல் சிரிக்கும் - விண்மீனும்,
என்னை ஏமாற்றி உன்னிடம் வந்தது,
நீ ! நிலவாய் புன்னகைப்பதனால் !!

:::: இராம்குமார் கோபால் :::::


Online Casino Australia Online Casino Casino Online Grand reef casino Casino Mate

என்னுடன்பிறவாதவள் மகளே !



"தமிழுக்கு அமிழ்தென்றுபேர்" அத் -
தமிழ் குடியில் பிறந்த, இனிய
அமிழ்தாம் நீயும் !

பச்சை பசுங் கொண்டல்
வண்ணன் - திருமால்,
விரிசடைக் கடவுள் - சிவன்,
குன்றம் எறிந்த - முருகன்,
இவர்கள் அருள்க்கொண்ட - திரு
முகம் உணதாம் !

எட்டுத்தொகை நூல்கள் -
குறுந்தொகை,
நற்றிணை,
ஐங்குறுநூறு,
அகநானூறு,
கலித்தொகை,
புறநானூறு,
பதிற்றுப்பத்து,
பரிபாடல்
பத்துப்பாட்டு நூல்கள் -
திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
மலைபடுகடாம்,
குறிஞ்சிப்பாட்டு,
முல்லைப்பாட்டு,
பட்டினப்பாலை,
நெடுநல்வாடை,
மதுரைக்காஞ்சி
இவை எவற்றிலும் கூறாத
இலக்கிய, இலக்கணமாய் - உன்
மழலை பேச்சும் - மதுரமாய்!!
இருந்திருக்க கூடுமே!

"நன்றியறிதல்,
பொறையுடைமை,
இன்சொல்லோடு
இன்னாதஎவ்வுயிர்க்கும் செய்யாமை,
கல்வியோடு
ஒப்புரவாற்ற அறிதல்,
அறிவுடைமை,
நல்லினத் தாரோடு நட்டல்
இவை எட்டும் சொல்லிய
ஆசார வித்து " என் சொல்லும்,
ஆசாரக்கோவை சொல்லாய் - நீ !
ஒழுக்கம் கொண்டிருக்க தவறுமோ !

மலையிர்ப்பிறக்கும் சந்தனம்,
கடலில்ப்பிறக்கும் முத்து,
யாழிர்ப்பிறக்கும் இசை - போல்,
உன் புகழ் உலகம் போற்றும் -
நாள், விரைவில் என - உன்
கண்கள் சொல்ல அறிந்தேன் !

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனகேட்ட தாய்" இத்திரு -
குறளின் பொருளாய் நீ விளங்கிட, உழைக்கும்
உன் அன்னைத்தந்தையர் இதயம் - இன்பம்
பொங்கிட நீ உயர்வாய்! உறுதியே !!!


::::: இராம்குமார் கோபால் :::::


Thursday, March 15

இனி ஒரு விதி செய்வோம் !



கலங்காத கண்களிலும்
கரைபுரண்டோடும் வெள்ளமாய்,
காண்பவர் கண்களில் எல்லாம் நீர் வீழ்ச்சி !

இந்த கொடுமைதனை காணவா - எமக்கு,
கண்ணிரெண்டை கொடுத்தாய் இறைவா ?

அரக்கர் குல ராவணனின்
வம்சாவழி சிங்களவன்,
எங்கள் உடன் பிறவா - தமிழர்,
தம்பி, தங்கைகள்,
அக்காள், அண்ணன்,
அனைவரையும், அற்பத் -
தனமாய் கொன்று குவிக்கும்
ஆணவத்தை காணயிலே!

என் கையிலும் ஒரு துப்பாக்கியை,
கொடுங்கள் என்னால் இயன்றவரை,
ஐந்து, பத்து சிங்கள நாய்களையேனும்
கொன்று விட்டு வருகிறேன்.

வெறிநாய் கடித்த ராஜபக்சே!
அப்பாவி தமிழன் இருப்பிடங்கள்,
பால்குடி மாறா இளம் பிள்ளைகள்,
பெரியவர், பெண்கள் என பாராமல்,
குண்டு வைத்து தகர்க்கையிலே - அவர்கள்,
கதறி அழுவது எங்கள் காதுகளில்
கனத்த குரலாய் கேட்கிறதே !

பெண்கள் மானம், கற்ப்புத்தனை,
பொன்னாய் மதிக்கும் தமிழர் - நமது
பெண்டீர் மானம், கற்பு எல்லாம் சூறையாடிய,
காம வெறி நாய் சிங்கள ராணுவ
ஈனப்பிறவிகளை, பெயரொன்று சொல்லி
அழைத்திடவே எங்கும், தேடி ஆப்டல..

போர்வ்விதி மதிக்கா இலங்கையரசை,
இறக்கம் துறந்த, அரக்க இனத்தை,
அடியோடு அழிக்கும், தருணம் இதுவே!
போர்க்கொடி உயர ப்பறக்கும், வானில் - மழை -
மேகமாய் சூழ்வோம், எதிர்ப்பினை காட்ட !

மடிந்து, இழந்தது போதும் இனியும்,
இருக்கும், சிலப்பல உயிரேனும் காக்க,
இறக்கம் கொண்டவன், நீயும் என்றால்,
உன்னால் முடிந்ததை செய்வாய் தோழா !

இனம், மதம் ஏதும் இல்லை என்றே,
"இனி, ஒரு விதி செயவ்வோம் "
என்னும், பாரதி சொல்லாய் !
இணைந்த கரம் நீட்டி, இணைவோம் வா! வா!!

:::: இராம்குமார் கோபால் :::::





கானல் ! (OASIS)


கானல் ! (OASIS)
---

வறுமை இருளில்,
வானம் வசம் மறைந்து,
மேக இடுக்கில் நுழைந்து,
நிலவின் ஒளி படர !

மொட்டான அல்லியும்
மெதுவாய் மலர, உன் முகம்
கானல் நீராய்! தென்பட்டது,
தொலைவில் இருந்ததாலோ என்னவோ?

அருகில் வர, ஆசை நெஞ்சினை -
சுமந்து, வேக வேகமாய் நடந்தேன்,
மேக மூட்டம்ப்போல் கூட்டமாய் -
சேர்ந்து, கலந்த மழையாய்,
மனதோடு என்னுள் கரைந்தாயே !

மழை! பெய்யும் முன்னே மணக்கும்
மண் வாசம் கலந்த, இளங்காற்று வீச -
ரசிக்கும், இளம்பபெண் அவளும் -
சிந்தும், புன்னகை! பூவும் மழையோ ?

:::: இராம்குமார் கோபால் :::::



Tuesday, March 13

மயக்கம் !


மயக்கம் !

மலர் போன்ற விழி - உன்
பெயரும் அதுவோ !

நான் சொல்லாமல் அழைத்தேன்
எனக்குள், உன் பெயரை
வாசம் பூ வாசம், என் வசம் !
வண்ணத்து பூச்சிகள், தேனீக்கள்,
தேடி பறந்து வந்த வண்டுகள் கூட்டம்,
எனை மொய்க்க வருவதை கண்டு !
என் தலை சுற்றிப்போனேன்.

மயக்கம் எதனால், என்பது புரியாமல் !!


:::: இராம்குமார் கோபால் ::::



Saturday, March 10

மழலை ச்சிரிப்பு!


பச்சிளம் பருவம் அறிந்ததெல்லாம்,
பசி, தூக்கம் இவ்விரண்டும் தானே !
இறைவனது ப்படைப்பில், ஆறறிவை
தாங்கி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து
நடக்க நாள் ப்பொழுது கடக்க!

மல்லிகை மொட்டாய், எட்டிப்
பார்க்கும், பற்கள் தெரிய சிரிக்கும்,
அந்த சிரிப்பினில் தான் எத்தனை அர்த்தம் !
கள்ள சிரிப்பு என்பதா ?
செல்ல சிரிப்பு என்பதா ?
கவலைத்தெரியா சிரிப்பு என்பதா ?
அன்பின் இதழ்விரிப்பு என்பதா ?

சிரித்து மகிழ்ந்து,
விளையாடி சோர்ந்து,
தூங்கும் வேளையிலும் என்ன -
அது சிரிப்பு ? கோடி கோடியாய்,
கொட்டிக்கொடுத்தாலும் , தேடி
எங்கும் அலைந்தாலும், அச்-
சிரிப்புக்கு ஏது ஈடாகுமோ ?

:::: இராம்குமார் கோபால் ::::



Saturday, March 3

எதிர்ப்பளிசீடு ! (FLASHBACK)



மோகன பெண்ணின், இதழ்ச்சுழிவை
மோதிட துடிக்கும் என்வெட்டுதட்டை,
திட்டித்தீர்த்து என்னப்பயன்? பாவம்!
வெண்ணைத்தின்ற அவனை விட்டு,
விரல்சூப்பி யவனை, திட்டுவதாய் ஆகுமே!
கண்கள், பிரித்து பார்த்திருந்தால்,
கள்வி! அவளை ரசித்திடுமோ - காமம்,
காதல் புரியாது, அவளிதழை மட்டும் கேட்டிடுமோ ?

காணொளி, எதிர்ப்பளிச்சீடின் பின்னூட்டமாய்
விழித்திரை வழித்தோன்றி ஓடிம்முடியா,
நினைவுகள், இரும்பினும் வலிமையாய்,
எனைஇருக்க, இலகிட ஓடும் நெருப்பாய் சுடுமே ?

::::: இராம்குமார் கோபால் :::::




Friday, March 2

மீளாத்துயரம் !


மீளாத்துயரம் தூரத்தெரிகையில்,
மீனின் கண்ணுடையாள் - ஒளி
பட்டென்நெஞ்சம் விம்மி துடித்திட,
விடியல் தொடங்கியதுப்போல் ஓர் புதுமை....

கிளிகள் பேச்சாய், அவள் மொழி சிணுங்கலாய்
செந்நிற வானமாய், அவள் இதழ்ச்சாயம் மின்னலாய்
சூரியன் உதயமாய், அவள் கண்கள் வெளிச்சமாய்

விடிந்தது காலையும், விழுந்தது அவள் மடியிலோ ?
பறந்தது துயரமும், என்மேல் பரவிய அவள் வடிவிலோ ??

:::: இராம்குமார் கோபால் :::::




Thursday, March 1

தங்க தளபதி !


தங்க தளபதியே !
எங்கள் தலைவனே !!
தரணியை ஆளாப்பிறந்தவனே!!!

உனக்கு இன்று பிறந்தநாள் - இதுவே
தமிழுக்கும், தமிழனுக்கும் சிறந்தந்நாள்,
தவம்க்கிடந்து பிறந்த முத்தோ நீயும் - நிகர்
இல்லை உனக்கு, இங்கு எவரும்.

பேரறிஞர் அண்ணா வழிநடக்கும்
தமிழ்வ்வேந்தர் கலைஞர் பெற்றெடுத்த
தவபுதல்வரே ! எங்கள் தளபதியே !!
உன்னால் இந்நாள் பொன்னானது.

உன் கண்ணசைவில், இதழசைவில்
எங்கள் செயல் அனைத்தும் ஒருநொடியில்
செய்துவிட காத்திருக்கும் எமக்கு
ஆணையிடு செந்தமிழ் செல்வா.

ஆலம்ப்போல் விழுதூன்றி
அமில்தமிழ் மொழிப்பேசி
ஆரியனவள் கொட்டம் அடக்க
ஆணவத்தின் தலைவியை அழிக்க
அதிகாரம் உன் கையில் வருமோ - அந்நாளில்
தமிழகமும் புது உயிர் பெறுமோ !

உன் வரவால் மகிழ்ந்தது எங்கள் நெஞ்சம்,
உன் சிரிப்பால் சிலிர்த்தது எங்கள் உடலும்,
உன் பேச்சால் முறுக்கேறி முறைத்து எங்கள் நரம்புகள்,
உன் துணிவால், பயம் மறந்தது எங்கள் கண்கள்,
உன் அயரா உழைப்பு, நீ எமக்கு கற்றுத்தந்த பாடம்.

வாழ்க நீ பல்லாண்டு என்று வாழ்த்த வயதில்லை எனக்கு - எனவே,
என் நெஞ்சம் நிறைத்து வணங்குகிறேன்
இறைவனாம் எங்கள் கலைஞரை,
உன்னை எங்களுக்காய் ஈன்றெடுத்து தந்தமைக்கு!



:::: இராம்குமார் கோபால் ::::