Saturday, December 31

முன் அறிவிப்பு !


தெளிந்த வானில்
திரிந்த பாலாய் - மேகங்கள்
சூரியனை சூழ்ந்த
வண்ணம், செந்நிற தணலாய்
திசையெங்கும் கோலமிட,
வெளிச்சத்தின் வறுமையில்
வரும்மிருள், இரவின் தொடக்கமோ ?
இல்லை, புதுவருட பிறப்பின்
முன் அறிவிப்போ ?

புத்தாண்டு கணக்கு!

 
 மருத்துவர் சொன்ன தேதியில் அல்லாமல்
சரியாக ஒன்றாம் தேதியில் பிறந்த மழலையே
உனக்கு இன்றோடு முடிகிறது அகவை 2011,
நாளை உனக்கு பிறந்தநாள்
உலகே கொண்டாடும் சிறந்த நாள்
மிடுக்கென தொடக்கி விடுக்கென
முடியாதே, இம்முறையாவது ...

புதிய செயல்கள் பல தொடங்க வேண்டும்,
தொழில் முன்னேற்றம் பெருக வேண்டும்,
பணபுழக்கம் நிறைய வேண்டும்,
இழந்த வீட்டை மீட்க வேண்டும்,
இல்லத்தரசி கிடைக்கவேண்டும்,
இனிமை சொல்லும் குழந்தைகள் சிரிக்க வேண்டும்,
நண்பர்கள் நலம் பாராட்டவேண்டும்..

இப்படி பல கணக்குகள்,
பெருக்காமலே முடிந்தது இவ்வாண்டு
வருமாண்டில்லாவது இக்கணக்கை
முடிக்கும் முயற்சியில்
அடியெடுத்து வைக்கிறேன், என்
எதிர்கால கணக்கை தொடங்க 2012 இல் .....

Wednesday, December 28

முக நூல் !


எங்கிருந்தேன் என்று
எனக்கே தெரியாத நிலையில்
இன்று என்னை தெரிந்தவர்கள்
மூவாயிரம், ஆயிரம் பேர்.
பேச்சுரிமை,
சிந்தனை,
எண்ணங்கள்,
நிகழ்வுகள்,
நிகழ்பவை,
நிகழ்ச்சி ,
நினைவு,
கருத்து,
வாக்குவாதம்,
பதிவுகள்,
படங்கள், இத்தனையும்..,
எதனை பேரை சேர்ந்திருக்கும் ?
நீ இல்லாமல் போய்விடின்.

என்னவளை சந்திக்க வைத்தாய்,
என் நண்பனுடன் பேச வைத்தாய்,
தொலைந்து போன சொந்தத்தை மீட்டு தந்தாய்,
புது, புது தோழர், தோழியை கொடுத்தாய்,
என்னையும், என் ஆற்றலையும் வெளிகொனர்ந்தாய்,
பேச்சாற்றல் பிறந்தது,
கவி வரிகள் எழுதினேன்,
பல, பல நல்லுள்ளங்களை சந்தித்தேன்,
புது உற்சாகம் கிடைத்தது
முகநூலே நீ எங்கிருந்தாய் இத்தனை நாள் ?
இந்த ஒரு தருணத்துக்கா, என்னை
முப்பத்திரண்டு வருடம் காக்க வைத்தாய்
சுருக்கமாய் சொல்வதெனில்
சோறின்றி கிடந்தாலும் கிடப்பேன் நானும்
நீ இன்றி ஒருநாளும் உயிர் பெறாது

வாழ்க உன் புகழ் ! வளர்க நீ வானுயர !!

Tuesday, December 27

தணல் !

நீ வராத நாட்களில்
உன் வாசல் பார்த்து, காத்து நின்றேன்
என் வீட்டு ஜன்னல் கதவுகளை கூட
சாத்தாமலே !

வாசம் பூண்ட மலரே நீயும்
இன்றென்னை சிறை
வாசம் புக செய்ததும் ஏனோ ?

புகையாத நெருப்பாய் நானும்
தணல் விட்டு எரிகிறேன்
வந்தென்னை அணைப்பாயோ ?
என் வாழ்வில் வசந்தம் வீச
செய்வாயோ ??

Monday, December 26

அவளறிவோம் !


பேச்சு :
நாணோடு விர ல்சேர
விளைகின்ற இசையே, நீ
காற்றோடு மோததே,
என்னவள் பேசும் நேரமிது !

பார்வை :
இலயசைய, மலரசைய
காற்றசைவின் காரணமோ ? அந்த
மலரசைய அதன் இதளசைய - என்னவள்
கண்ணசைவை கேட்டிடுமே !

சிரிப்பு :
தேன்சிந்தும் மகரந்தம் மறுமலர்
பிறக்க கருவாகும் - என்னவள்
இதழ் சிந்தும் புன்னகையோ
என்னை அவளுக்குள் சிறையாக்கும் !

நடை :
கடலலையும் கரை நோக்கி
காலம்ப்பல தொடர்ந்தாலும்,
கடற்கரையோரம் பதிந்திருந்த - என்னவள்
கால்த்தடம் கண்டு, வந்தவழி தவறென்றே,
பின்னோக்கி சென்றிடுமே !

வடிவு :
மல்லிகையின் அரும்பான
விழிகள் கொஞ்ச !
வெண்ணிலவின் வடிவோ
அவள் முகமென்பேன்!
விடியலில் கேட்கின்ற கூவல்,
குயில் தானோ !
என்னை எழுப்பையில்
அவளைக்கும், அக்குரல் !
பறக்கின்ற பறவைக்கும்,
அவளுக்கும் ஒரு தொடர்பு
அதன் இறகேதான்,
எனைவருடும் அவள் விரலோ?
இல்லாத இடத்தை
தான் எங்கே தேடுவது
அவ்ளிடையை தான் சொல்கிறேன்,
யாரிடம் கேட்பது!
வடிவுக்கு அரசியை இனியும்,
எக்கணம் சொல்லி முடிப்பேன்
சொல்லிருந்தால் சொல்லுங்கள்
தமிழில்,
எனை சொக்க வைத்த
சொக்கியாம் அவளை !
புதுமொழி கொண்டே நானும்
புனைவேனே காதல் பா வும் !!

Saturday, December 24

முல்லை பெரியாற்றின் இடுக்கி(னில்)!!



மேகம் அழுத கண்ணீரிலே
மண்ணில் விழுந்த துளிகள் எல்லாம்
மழைத்துளிகளாய் சேர்ந்து,
சிறு குட்டையாய் தேங்கி,
தெரு நெடுக ஓட,
ஓடையாய் மாறி,
கால்வாயில் கலந்திடவே,
பெருக்கெடுத்த வெள்ளமாய்
நதியென தவழ்ந்து,
ஆறென ஆர்பரித்து,
முக்கூடல் சேர்ந்து,
முக்தி பெரும் எண்ணத்தில்
கடல் தேடி ஓடி வர,
வறண்ட காலம் வராமலிருக்க
அதநடுவே அணை போட்டோம்
முப்போகம் விளைதிடவே.
மண்ணில் பிறந்த எவனுக்கும்
இம்மண்ணே சொந்தமில்லா நிலையில்
தண்ணீர் மட்டும் எங்கனம் ?
இதில் தவறில்லை, இது தவறினால்
நாளைய தலைமுறை தழை க்குமோ ???

தமிழா ! நீ

மதம், இனம், மொழி
பார்த்தா பழகினாய் ?
இருப்பதையும் கொடுத்து
வருவோரையெல்லாம் வரவேற்றாய்,
பிழைக்க தெரிந்தவனா நீ ?
உன்னை நீயே கேட்டு பார் !
பிறரை கெடுக்க முனைந்தவனா நீ ?
ஒருக்காலும் இருக்காது !
வெட்கபடு இன்றாவது,
வந்தவரெல்லாம் உன்னை ஏய்த்து
உன் முதுகில் ஏணியாய் ஏறியே - உன்
உச்சி முடி ஒவ்வொன்றாய்
பிடுங்க தொடங்கி, இறுதியில்
மொட்டையடித்தும் முடித்துவிட்டனர்,

இன்னுமா உறக்கம் உனக்கு ??

விழித்திடு, புது விடியலும் உன்னை அழைக்குதே,
புறப்படு, புயலாய் உன் செயல் தொடங்க,
சேர்ந்திடு, கை கோர்த்து தமிழனின் ஒற்றுமையை உயர்த்த,
தடுத்திடு, முல்லை பெரியாற்றின் இடுக்கினில்
மலையாய், மலைத்திருக்கும் அணையை உடையா - அன்றோ !
மரண படுக்கையில் படுப்பது, நீயும் நானும் மட்டுமன்று
நம் நாளைய தலைமுறையும் கூட ...

ஒன்று கூடுவோம், ஒற்றுமை காட்டுவோம், அணையை காத்திடுவோம் !!

கனவு ...


கனவு ...

சத்தங்கள் எல்லாம்
சங்கீதமாய் - உன்
முத்தங்கள் எல்லாம்
சந்தோசமாய் - நான்
நிதங்கள் எல்லாம்
உன் பெயரை - தினம்
பக்கங்கள் எல்லாம்
நிரப்புகிறேன், உன் புன்சிரிப்பில்
உயிர் வாழுகிறேன்.

புது மலராய் - நீ
பூத்திருக்க, உன்
புன்னகையால்
மதிமயங்கி - அந்த
அதிர்ச்சியில் சற்றே
சாய்ந்திருந்தேன் - உந்தன்
சங்கீத குரல் கேட்டு எழுந்துவிட்டேன்

மெதுமெதுவாய் உன்னை
சேர்த்தணைக்க - சிறு
வண்டினை போல்
தேன் ருசிக்க
கண்டிப்பாய் வந்திருப்பேன்
என் கனவு மட்டும்
கலையாதிருப்பின் ...................

Wednesday, December 21

நிஜம் தேடும் நிழல் !


நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று....
----
நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று,
உன் மடி சாய்ந்து தோளிலும் சாய்ந்து
உறங்க நினைத்தது தவறில்லை என்று.

மலர் சேரா மாலையும் உண்டோ
அந்த மாலையும் சேரா திருமணம் உண்டோ ?

நதி சேரா கடலும் உண்டோ
அந்த கடல் சேரா அலையும் உண்டோ?

பொன் சேரா பெண்ணும் உண்டோ
அந்த பெண் சேரா புன்னகையும் உண்டோ ?

நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று....

பூவுக்குள் புதைந்தவளே இந்த
பூவுலகில் ஏன் வந்தாய் ?

வழிமாறி சென்றவன் நானே
உந்தன் விழி பார்த்து புதுப்பாதை கண்டேன்,

நிஜம் தேடும் நிழலும் நானே ?
நீ இன்றி நானும் அன்றோ ??

நிஜம் ஒன்று சொல் பெண்ணே
உந்தன் நிழல் என்றும் நானே என்று....



என் நிலை!



நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!

நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!
உச்சியிலிருந்து மண்ணில்தாவி
பள்ளம், மேட்டில், நில்லாமல் செல்வாயோ !!

நிலவு , வானம், நட்சத்திரம்
வண்ண பூக்கள் வாசம் கலந்து
நீந்தி செல்லும் மீனுக்கும் தெரியாமல்
நீறருந்தி செல்லும் மானுக்கும் புரியாமல்
அலைகடலை சேரும்முன் அவளை நீ பார்பாயோ !!

நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!

பார்த்தால் கொஞ்சம் சொல்லு,
நான்,
கூடில்லா பறவையாய், திசையறியா தவிப்பதை
குழலில்லா இசையாய், ஜதியறியா ஒலிப்பதை
நீரில்லா தேசம் போல் வறண்டு சாகக்கிடப்பதை.

நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!

வருகைக்காக !




நிலவை பிரிந்த மேகமாய் நானும்

உன்னை தேடி அலைந்தேனே,
இருள்சூழ்ந்த இரவில் இங்கு
உன் முகம் காணா தவித்தேனே,
தேவதையாய் வந்தவளே !
இன்றென்னை மறந்தாயோ !
வறுவாயோ, தருவாயோ
உனை காணும் வரமொன்று ??

கை சேர!

நேற்றிரவு நித்திரையோ நிலவுக்கே சொந்தம்,
நிஜம் சொல்ல நினைத்தால், அவள் நிலவின் பந்தம்,
பௌர்ணமியின் வெளிச்சமும் , பகலவன் வருகையும்
இணைகின்ற நேரம், விடிகின்ற பொழுதோ ?

உறங்காத இறவை நிறைத்ததும் அவளே !
திடமான நெஞ்சை குடைந்ததவள் விழியே !
சிரித்தாலே மழலையாய், சிதைத்தவள் இதழே !
மறந்தேனே நிலவாய், மறைத்தவள் அழகே !
கண் பேச கேட்டதில்லை, பேசியதவள் இமையே !

இதுவரை இல்லையடி ஒருநாளும் இதுபோன்று
என்னதவம் செய்வேனோ !!

அவள் கரம் எந்தன் என் கை சேர ??

சிறை!

கண்ணிமைக்கவும் தோணவில்லை
கன்னிமயில் உன்னை காணயிலே,
என் கண்கள் ரெண்டும் காணவில்லை
உன் கண்ணிடம் சொல்லி தேடி கொடு ..
வீடு செல்ல மனம் மறுக்க
பசி மறந்து பார்த்திருப்பேன்
கைது செய்த உன் கண்ணிரண்டால்
காலமெல்லாம் சிறை இருப்பேன்...

முட்கள்!

இனிமையை சொல்லும் உதடுகள் கூட
சில நேரம் பொய்கள் சொல்லும்
உன் இமைகளோரம் கவிதை பாடும் கண்கள்
என்னுள் கலந்து போகும்,
நீ நிலவோ,
அதன் உறவோ.
மலரோ,
அதன் மனமோ.
இசையோ,
அதன் இனிமையோ.
மழையோ,
அதன் துளியோ.
பனியோ,
அதன் தூய்மையோ.
இதில் எதுவோ,
நீயாய் தெரிந்தது.
நீ கடந்து வந்த நாட்கள் எல்லாம் முட்கள் படர தவித்து நின்றாய்
தந்தையும் தாயும் உன்னுள் உன் உருவாய் இருக்க,
உன் எண்ணங்கள், சிந்தனையாய் உன் உதட்டில் படித்தாய்
பிறை தேய்ந்த காலங்கள் இருள
இருள் சூழ்ந்த பயணத்தில் உன் கால் தடங்கள் தெரியுமோ ?
இந்த இருள் சூழ்ந்த காலங்கள் மறையும்,
காலம் வெகு தொலைவில் இல்லை,
காத்திரு நீயும் கனியும் கனி ருசிக்க...






கயல் விழி!

கண்களும் கவி பாடுமே என்பதற்கிணங்க
கொஞ்சும் சலங்கையாய்,
கொத்தி செல்லும் கழுகினும் கூர்மை,
விழி மூடி யோசித்தாலும் நீங்காத குளுமை,
கலங்காத நெஞ்சையும் சற்றே கிறங்கடிக்கும் புதுமை,
இனிது சொல்லும் இதழை சுவைக்கும் இளமையின் இனிமை ........
இது கயல் விழி மட்டும் அன்று
கவிதையின் சுரங்கமும் கூட !!

இளைய மகள்!

நில்லாமல் சுழலும் பூமி நின்றாலும் நின்றுபோகும்,
நிலையில்லா இடபெயர்ச்சில் நகரும் நிழலும் மறைந்து போகும்,
நீலமேக கடலலைகள், கண்ணயரும் கரையோரம்,
அவளுகென்று காத்திருந்தேன், நில்லாமல் சுழலும் பூமியாய்,
காலங்கள் நகர்ந்ததில் நிழல் போல் சுருங்கினேன்
கடலலையாய் கரை தொட முடியாமல், கண்ணயர முடியாமல்.
மங்கியது சித்திரை வெயிலும், சந்திரனின் வருகையால்,
வந்தாள் அவளும்,
மிளகாய் பஜ்ஜி வாங்க சென்ற
என் இளைய மகள், காசை தொலைத்த பயத்தில்
அடிக்கு பயந்து, பயந்தவாறு !!

பிரிவு !

உறக்கம் வரமறுத்த சமயம்
தலையணையில் முகம்பதித்து சிந்தித்ததில்
அவள் பேச்சின் அர்த்தம் உணர்ந்தேன்
ஆயிரம் தான் இருந்தாலும்
அவள் என்னவள் அல்லவா
என்கிற நாட்கள் எல்லாம்
என்னை கடந்து போனது
பாவம் அவள் செய்ததுதான் என்ன ?
என்னை மட்டும் விரும்பியதோ ?
என்னமோ தெரியவில்லை
அவள் இருக்கும் போது இருந்த இதயம் இல்லை
இப்போது என்னிடத்தில்
அவள் பறந்து போனாலே !!
என்னை மறந்து போனாலே !!!

நினைவு !

இனிமை கொஞ்சும் இரவு நேரம்
இலைகள் அசைவில் வசந்த காலம்
இறகை போல மெல்லிய காற்றில்
அவள் நினைவுகள் எந்தன் நெஞ்சின் ஓரம்
கணவாய் போனகும் காதலே பொய்யோ ?
காணாமல் போன எந்தன் இதயம்
துடிப்பது போன்ற துடிப்பே நீயோ ?

துகில் உறிக்கும் பாம்பாய் நெளிந்தேன்
இலை உதிர்ந்த மரமாய் நின்றேன்
மலர்ந்து மடிந்த மலராய் ஆனேன்
தோகை இழந்த மயிலோ நானும் ?

மயக்கம் தெளிந்து விழித்தது போன்ற
மனநிலை எந்தன் மனதை இருக்க
இயங்க மறுக்கிறது எந்த இதயம்
எங்கே உன் குரல், காற்றை கேட்டேன்.

கடந்து போன நாட்களின் நினைவில்
கடலலையாய் நானும் கரை சேர முடியாமல் !!

தவிப்பு!

சொல்லாமல் தவிக்கும் தவிப்பு
சொல்லியவுடம் கிடைத்த சிலிர்ப்பு
சுகமான சுமையா காதல்?

அவளோடு இருந்த நாட்கள்,
அவளுக்கென்று இருந்த இதயம்,
அவளே கதி என்றது என் விழி,
அவளும் இருந்தால், என்னை போல் ஒருத்தியாய்,

காலங்கள் உருண்டோட, காதலும் உருண்டது
காதலை சுமந்த கண்களில் கண்ணீரும் உருண்டது

கலைந்து போகும் மேகமா என் காதல் ?