Wednesday, October 17

சென்னையில் மழை!



கொட்டும் மழையின்
ஊடே குளிர்க்காற்று,


குடை எடுக்க மறந்து,
இரண்டாம் முறை
குளித்தேன்,
உடையணிந்தே,
எனை மறந்து,

வானைக் கண்டு,
கைகள் ஏந்தி,
எகுறிக் குதித்தே,
எத்தி நடந்தேன்,

ஓடையாய் மாறிய
சாலையில், ஓடி
தப்பிக்க முனைந்த,
மீன் குஞ்சியை
விரட்டியே,
வீடடைந்தேன்,

மழை,
மனதை திருடி,
உலகை மறக்க
செய்திட,
காகித படகைப்
போலே, அதில்
மிதந்தேன்  நானே,

அந்தநாள் நியாபகங்கள்,
நினைவுக்கூர்ந்த மழைக்கு,
நன்றி!


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

வறுமை ஒழிப்பு தினமாம் இன்று!


பிணைந்து தின்ன
சோறின்றி,
குப்பையில் ஈ
மொய்க்கும்,
இலையை நக்கி,
போக்கிய பசி ,

வறுமையின் சிகரமாய்
நம் நாட்டில்,
அன்றுப்போல் இன்றும்,
என்றுமோ?

வறுமை ஒழிப்பு
தினமாம் இன்று!

வற்றாத ஆற்றை
கண்டவர் யாரோ,
ஒழியாத வறுமையை
கொண்டாடுபர் யவறோ?


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

குளக்கரை!


அவளது அடுக்கு
மொழிப் பேச்சில்,
தடுக்கி விழுந்தது
என் இதயம்..,

தண்ணீர் இல்லா
குளம் ஒன்றில்,
நாரைகள் துழாவும்
கறைதனில்..

குளமாய் அவளிதயம் - அதன்
கரையாய் அவள் கண்கள்.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.

Tuesday, October 16

வலி!


கண்ணிமைக்கா பார்த்திருந்தேன்,
கணக்கின்றிப் பார்த்திருப்பேன்,
ஒற்றைக்கால் கொக்கைப்போல
கால்க்கடுக்க நின்றும்,
காணாமல் ஏமாந்தே,
நழுவ விட்டேனடி,
மீனோ நீயும்,
துள்ளி மறைந்தாயடி,

நேரில்,
ஒரு முறையும் பார்த்ததில்லை,
ஒரு வார்த்தையும் பேசியதில்லை - என்
கைப்பேசியில் உன் நிழற்ப்படம்
திணித்தே, நாள்த் -
தவறா பார்த்திருந்தேன்,
பித்தனைப் போலவே,
நித்தமும் நானுமே,

உண்டாயா, உறங்கினாயா,
உள்ளங்கை கழுவினாயா,
உறக்கம் கொண்டெலுந்தாயா,
ஊருக்கெல்லாம் போய் வந்தாயா,
இப்படி தானடி நாள்தோறும் நானுமே,
உன் நிழற்ப்படம் அதனை ஏந்தி,
ஏதேதோ புலம்புகிறேன்,

எரியும் நெருப்பில்
கரியும், புகையும்,
எஞ்சத் தேடினால்,
மிஞ்சுமோ சாம்பலும்,
அப்படி தானடி,
ஆனதடி இவ்விடம்,

நினைவும், நிழலும் (நிழற்ப்படம்),
கரியும், புகையுமாய்,
கனவும், கவிதையும்,
சரிசமமாய், சாம்பலாய்,

வலி, எப்போதும் என்னோடு.
 
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

Saturday, October 13

நெஞ்சு பொறுக்குதில்லையே!


அக்னி பிழம்பிலிருந்து
சொல்லெடுத்து,
ஆணி வேரின் வரிகள்
பின்னி - முறுக்கு கம்பிகள்
போலே, படிக்கும் எவர்க்கும்,

நரம்புகள் புடைக்கும்
கவிகள் தந்த மகாக்
கவி பாரதி நீயும் - ஏனோ,
பாரதத்தில் இல்லை இன்று,
துளிர் விட்டு திரிகின்றனர்
சட்டத்தை இயற்றியவர் போலே,
ஆளுக்காள் நாட்டாமையாய்,

உன் வாய்ச்சொல் சுட்ட
இந்நாட்டில், துப்பாக்கிகள் சுட
தொடங்கிவிட்டன,
கேட்பாரில்லை - கேடு
கேட்டு பொய் விட்டான்
தமிழன்,
சொந்த தமிழ்நாட்டிலே,
உரிமை இழந்து தவிக்கிறான்
தமிழன்,
ஊரை விட்டு ஒடச்
சொல்கின்றனர்,
பட்டினி கிடந்தேனும்,
வாழ்வுரிமை கிடைக்க
வாய்திறக்கா வாதாடுகிறான்,
தமிழன்,
பொய்ப்பழி சுமத்தி சிறை
வாசம் அடைக்கின்றனர்,
இன்னும் சில நாள்
போனால் தமிழன் இருந்த
சுவடை கூட வரலாறு
சொல்ல கூடும் நாள்
வருமோ?

அய்யா பாரதி,
இன்னொரு பிறவி
எடுப்பாயோ - எங்களை,
தமிழரை காப்பாயோ?
இன்றைய உன் நினைவு
நாளில், எங்களது இந்த
வரமொன்ரையாவது நீயும்
கொடுப்பாயோ????????

"நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்"



எழுத்தோலை கோ.இராம்குமார்

முடிவு!


எஞ்சி இருக்கும் கஞ்சி வேண்டி
காலையில் வாசலில்,
கெஞ்சிக் கூவி நின்றாள் வஞ்சி
கிழிந்துப்போன பாவாடை, சட்டை
நலிந்துப்போன உருவமும், உடலும்,

தொய்ந்துப்போன குரலும், வாழ்வும்,
ஒருங்கே சேர்ந்த உருவமும், உயரமும்
அழகாய் ஓடியாடி திரியும் பருவமும்,
அதுவும்,
படிக்கும் வயதில் பாத்திரம் ஏந்தி,
அம்மா, தாயே பசிக்குது என்றாள்,
பாவம் பார்த்திட தானே முடியும்,
எத்தனை பேரால் அதுவும் கூட,
படிக்க துடிக்கும் அவளின் மனதை,
படித்து எடுத்தேன் அந்த முடிவை,

பள்ளியில் அவளும் ,
மகிழ்ச்சியில் நானும்.
 
 
எழுத்தோலை கோ.இராம்குமார்

அநீஸ்வராய நம!


தொந்தி கணபதியை
முந்தி வேண்டிட - பிந்தி
போகுமோ தீரா
வினைகளும் தீர்ந்தே,

தும்பிக்கையை மூன்றாம்
கையாய், யானை முகம்க்
கொண்டே நம்பிக்கையை
நல்கும் நாயகா உன்னடி
தொழுதோம் விநாயகா
என்றே நாளும்,

கரணம் தப்பிய மரணமாய்,
நிதமும் இருக்கும்,
எங்கள் வாழ்வும், உன்னை
தொழுவதால், தோப்புக்
கரணம் உன் காலில்
விழுவதால், பெற்றோம்
சுகம் கொண்ட வாழ்வும்,
எல்லா வளமும் பெற்றே,

"அநீஸ்வராய நம"
என்றே நாளும் உனக்கு
அர்ச்சனை செய்தோம்
பெரியவன் உன்னை மிஞ்சிய
இறைவன் எவரும் இல்லை
என்றே,

நாளும் நாளும்
எங்கள் குறை தீர்த்தாய்
அரசமர நிழற் அமர்ந்தாய்,
விநாயகா, வேலனுக்கு
மூத்த சோதரா, நவ கிரக
நாயகா, அருகம் புல்
மாலைகள் பூண்ட
ஆணை முகத்தா, அகம்,
புறம் எல்லாம் நிறைத்து
நீயே கதி என்றோம்,

எல்லா வளமும்,
எல்லா நலமும்,
வேண்டி நிற்கிறோம்,
உன் திருவடி அருகில்
சுக்ல சதூர்த்தி தினத்தில்
சங்கடங்கள் தீர்த்து,
இனியும் சேரா திருந்
திடவே மனமுருகி
பாடினோம்,

"பாலும் தெளிதேணும் பாகும் பருப்பும்
இவை நாண்கும் கலந்து உணக்கு
நாண் தருவேன் கோலஞ்செய் துங்கக்கரி
முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"

எம்பெருமானே, எல்லா வல்ல இறைவனே!


எழுத்தோலை கோ.இராம்குமார்

முடிவுகள் இல்லா தொடக்கங்கள்!


கனவுகள் தொடர்ந்திடும்,
இரவுகள் எல்லாம்,
கவிதைகள் எழுதிட
வரிகளை கொடுக்குமோ,
கனவுகள், கவிதைகள்

தெரிந்திட, எழுதிட
நினைவுகள், தவணையில்,
சொற்களாய் பிறக்குமோ,
மோனைகள், எதுகைகள்
மோகனமாய் கோர்த்திட
நிகழ்வது கனவோ இல்லை
நிஜமோ, அதுவும் இல்லையே,

கனவு, கவிதை இரண்டுமே
முடிவுகள் இல்லா தொடக்கங்களோ!



எழுத்தோலை கோ.இராம்குமார்

யார் எனக்கு?


கோதை விழி கூருடை -
யாள், கொஞ்சலாய் கூப் -
பிடுவாள், சங்கத் தமிழ்
பேசிடுவாள், சங்கதிகள்
தொடங்கிடவே சங்கோத

மொழியில் உரையாடிடுவாள்,
பிள்ளைகள் உறங்கிட
தாலாட்டு பாடிடுவாள்,
தவித்திடும் இணையைக்
கண்டு கண்ஜாடையில்
பாய் விரித்திடுவாள்,
ஊடலால் மோதிடும்,
போதெல்லாம் காதலால்
கட்டு புரண்டிடுவாள்,
கண்ணடிப்பாள்,
கதைப்பேசுவாள்,
கிள்ளி ஓடி, ஒளிந்துக்
கொண்டு பயந்தவாறு
படபடப்பாள்,

என்றெல்லாம்,

கதையில் படித்ததுண்டு,
கவிதையாய் கேட்டது உண்டு,
காட்சியாகவும் பார்த்ததுண்டு,
நிஜத்தினில் நிகழ்ந்திடவே,
அவளென்று யார் எனக்கு?



எழுத்தோலை கோ.இராம்குமார்.

கண்ணீர்!


கண்ணீரை துடைக்கும்
கைக்குட்டை, ஈரமாவதும்
பின்பு உலர்ந்து, மீண்டும்
ஈரமாவதும் .........,

இயற்கையாய், கண்களில்
அழுகையால், விழிசுனைப்
போல் சோக, துக்க, பாச
உணர்ச்சிகள், வெளிச்சம்
தேடிடும் வண்ணத்துப்

பூச்சியாய் பல நிறங்களில்,
சில, பல நேரங்களில் - எதிர்
பார்த்தும், பார்க்காமலும்,
நிகழ்வதால் தானோ?

கண்களில் கண்ணீருடன் நானும்,
காரணம் தெரியாமல் கண்ணீரும்,
சில காலமாய், நண்பர்களாய்,
இணைப்பிரியாமல்...

 
 
எழுத்தோலை கோ.இராம்குமார்.

பணம் காய்க்கும் மரம்!


பணம் காய்க்கும் மரம்
ஒன்றின் விதை வேண்டி
விரதங்கள், மா தவங்கள்
தொடங்கி மாதங்கள், பல
வருடங்கள் எல்லாம்
கடந்து, இளமை இன்பம்
எல்லாம் துறந்து, இறுதியில்
தொண்ணூற்றி ஒன்பதாவது
வயதில், பெற்றேன் அந்த

விதையை,

இனி இந்த விதை முளைத்து,
காய்த்து, பணமாகி அதைப்
பறித்து, செலவு செய்ய என்
வயது ஒத்துழைக்க மறுக்கிறதே,
இனியும் எதற்கு இந்த விதை எனக்கு?
தூக்கி எறிவதை விட, என்
சவக்குழியின் தலை மாட்டில்
விதைத்து விட என் மகனிடம்
சொல்லி முடிக்கும் முன்னே,
முடிந்ததே என் வாழ்வும்,

பணம் காய்க்கும் மரங்கள்,
முளைக்க வேண்டும் - நாளும்
உழைக்க நோகும் மனிதன்,
அதில் நானும் ஒருவனாய்
இல்லாதுப் போனதில் மகிழ்ச்சி.



எழுத்தோலை கோ.இராம்குமார்.

ஆசை நூறுவகை!


இருப்பதை இழந்துத் தவிக்கும்
வேளையிலும், ஆசை அமர்க்களமாய்,
சம்மணம் போட்டமாறும் மனமும்,
குருடோ, செவிடோ, முடமா இல்லை
நெஞ்சின் அடமா அடங்கா, முடங்கா
அம்மணமாய், அசிங்கமாய் அலைகின்றதே,









எழுத்தோலை கோ.இராம்குமார்.

நீயொறுக் கதை சொல்லு, நண்பா!


கனவும், கதையும்,
கற்பனையின் தாண்டவமோ,
காதலும், பெண்களும்,
கவிதைக்கு பொருத்தமோ,
நண்பா, நீயொரு கதை சொல்லு,
தாண்டவமில்லா கற்பனையில்,
பொருத்தமில்லா கவிதையாய்,

தூங்கும் வரைக் கேட்கிறேன்,

தூங்கியப்பின்பும் தொடரும்
கனவினில், முடிந்தால் அதன்
தொடர்ச்சியை நிறங்கள் துறந்தத்
திரையில், காணொளியை காண்கிறேன்,

நண்பா, நீயொறுக் கதை சொல்லு.


எழுத்தோலை கோ.இராம்குமார்

சொல்லடி என் தாயே கருமாரி!


எண்த்திசையும் எட்டும்ப்படி,
சொல்லிச்சொல்லி கொட்டிடு
முரசை, கேட்க்கும் சத்தம்
விண்ணைப்பிளக்கும் வரை,
எதிர்வரும் காற்றில் எதிர் -
ஒலி ஒலிக்கும் வரை,
ஓயாமல் ஒரு நாளும்,
முரசின் ஒலியாய், என்
எழுத்துக்கள் எல்லாம்,

எதிரொலிக்கச் செய்வாயோ
என் தாயே கருமாரி,

சிறியதாய் இருந்தாலும்,
காரத்தில் குறையாத கடுகாய்,
நானும், எழுதும் எழுத்துக்கள்
எல்லாம், ஏனோ கசக்கிறது
படிப்போர்க்கும்,
பார்வையிடுவோர்க்கும்,
லேசாய் சிரித்துவிட்டு
போவோர்க்கும்,
பார்த்தும் பார்காதுப்போல்
இருப்போர்க்கும் - என்னை
வெறுக்கும் ஒருசிலர்
எல்லோர்க்கும்,

தமிழ் படிப்பது அத்தனை
அசிங்கமோ, இல்லை என்
எழுத்துக்கள் அத்துனை
அசிங்கமோ, சொல்லடி என்
தாயே கருமாரி.


எழுத்தோலை கோ.இராம்குமார்.

புகையில்லா பூமி!



சாரல் பொழியும்
வானமாய் - நானும்,
வெளுத்து, இருண்டு
மீண்டும் உருண்டு
ஓடுகிறேன், நில்லாமல்,
சொல்லாமல் நீளமாய்,
நீலமாய் நிலத்தில்
இருக்கும் எல்லோர்க்கும்
மேலே மேகமாய்,


அண்ணாந்து பார்க்க
வைக்கும் உயரத்தில்,
உலகத்தில் இருக்கும் எல்லா
உயிர்க்கும் இறைவனாய்,
சூரியனாய், சந்திரனாய்,
மற்றும் உள்ள
ஏனைய கடவுள்கள்
உலவும் உலகமாய்,
கீழிருக்கும் உயிர்கள்
பிரிந்தப்பின் அடையும்,
சொர்க்கமாய், நரகமாய்
எத்தனை, எத்தனை
ஆத்மாக்கள், மகாத்மாக்கள்
ஆவிகள், நீராவிகள்
என்னில் அடைக்கலமாய்,

அந்த நாள் முதல்,
சிறிது நாள் வரை
நானும் மாறவில்லை,
ஆனால் ஏனோ
சில காலமாய்,
கலங்கி நிற்கிறேன்,
கண் எரிச்சல் என்னை
கொள்கிறது,
சுற்றுச்சூழல் மாசு,
என்னை துளைக்கிறது, (ஓசோன்,ஓட்டை)
துவண்டிருக்கும் எனக்கும்,
தூய்மையை கொடுப்பீறோ?
புகைப்பதை
கொஞ்சம் குறைப்பீறோ??

புகையில்லா பூமியை
கண்டிடவே எனது நெஞ்சம்
துடிக்கிறதே.



எழுத்தோலை கோ.இராம்குமார்.




*(புகையில்லா பூமியை
கண்டிட உங்கள் நெஞ்சமும்
துடித்தால், உண்மையிலேயே
உங்களுக்கும் அக்கறை இருந்தால்,
தயவுக்கூர்ந்து உங்கள் சுற்றுச்சூழலை -
யேனும் தூய்மையாய் வைப்பீரோ,
இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் சொல்வீறோ??????????????????????????????)


(Please Share)

பிறந்தநாள் வாழ்த்துகள் - கூகுள்க்கு!


தேடல் இருக்கும் இடங்களில்
எல்லாம் தேவை "கூகுள்"
உன் சேவை,
தேவைகள், தேடல்கள் தீரா
இவ்வுலகில் அள்ள, அள்ள
குறையாத அக்ஷயப்பாத்திரமாய்,
அள்ளிக்கொடுக்கும் உன் கைகள்
தருமனின் மறுப்பிறப்போ,
பாரியின் உயிர்ச்சேர்ப்போ,


தெரியாத ஒன்று தேவை
எனக்கென்றப்பின், கைகள்
தட்டச்சு யிடுவது உன்ப்
பெயரன்றோ?,
எந்த வளம் இல்லை இந்த
திருநாட்டில் "பாரதத்தில்"
என்பார்ப்போல்,
எல்லா தேடல்களும்
தீர்கின்றதே உன்னிடத்தில்,

இன்றல்ல என்றுமே,
இன்றுப்போல் என்றுமே,
எல்லா தேடல்களும் உன்னிடமே,
சரணடைவோம், பயனடைவோம்,
கைச்சொடுக்கும் நேரம்க்கொண்டே,
எங்கள் தேவைகள் தீர்த்துக்கொள்வோம்,
நன்றி உளமாற, மனதாற, மகிழ்வோடே,

வாழ்க, வளர்க உன் சேவை ஆல்ப்போலே,
விளுத்தூன்றி விருட்சமாய்.


"கூகுள்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"



எழுத்தோலை கோ.இராம்குமார்.

நிஜம் மறந்த பொய்!

வாட்டிய வெயிலில்
குடைப்பிடித்த கைகள்,
கொட்டிய மழையில்
தலைத்துடைத்த நொடிகள்,
வதைக்கின்ற குளிரில்

கதகதப்புத்தந்த இதழ்கள்,
ஏனோ,
இன்றில்லை என்னோடு,
நானோ,
நூலறுந்த பட்டமாய்
திசையறியா காற்றோடு,
நீயோ,
நிழற்மறந்த வெயிலாய்,
நிலவை மறந்த இரவாய்,
நிஜம் மறந்த பொய்யாய்,
என்னை மறந்தே எங்கே
சென்றாயோ?



எழுத்தோலை கோ.இராம்குமார்.

ஜெயந்தி!


சலவை ரூபாய் தாளில்,
சத்தியாகிரக வழியில்,
கதராடை இடையில்,
கண்ணாடி, கைத்தடி,
வழுக்கை தலை,
ஆட்டுப்பால்,
வேர்க்கடலை,
இவைகள் மட்டுமா
உன்னை அறியும்,

இந்நாடும், நாட்டும்
மக்களும், இவ்வுலகும்
உலகமக்களும், எல்லாம்
உன்னை அறிவர் - ஆனால்
நான் அறியேன் உன்னை,
உன் புகழறியேன்,
உன்னால் பிரிவினை அறிந்தேன்,
மதக் கலவரம் அறிந்தேன்,
ஜாதியரிந்தேன் - சுதந்திரம்
என்று சொல்லி நீப்
பெற்றுத்தந்த அந்த சுதந்திரம்
என்னிடம் இல்லை இன்று,
பேச முடியவில்லை,
எழுத முடியவில்லை,
இன்னும் எத்தனயோ
கொடுமை இங்கே,

என்னை விட இருபது
வருடம் முந்தி சென்றுவிட்டான்
ஆங்கிலேயனும், அமெரிக்கனும்,
ரூபாய்க்கு நிகராய் இருந்த
டாலரும் இன்று நூறில்
பாதியாய் எட்டாக்கனியாய்,

ஏமாந்த பாமரனாய் - நானும்,
என் நாடும் முன்னேறும்
என்று ஏங்கித்தவிக்கிறேன்,
உன் சுதந்திரம் எனக்கு
தேவை இல்லை நீயே
எடுத்துச் செல், மீண்டும்
வந்து தந்துவிட்டுப் போ,
பழைய பாரதத்தை - போதும்
இந்த போலிச்சுதந்திரமும்,
பொய்யும், புரட்டும்
நிறைத்த இந்த பாரதமும்.

தேச தந்தையே, உன்
மகன் நானும் ஏதும்
தப்பாய் பேசியிருந்தால்,
மன்னிக்கவும் - உன்
பிறந்தநாளில் எங்கள்
அனைவரையும் ஆசிர் -
வாதிக்கவும்.



எழுத்தோலை கோ.இராம்குமார்.

ஆயிரம் கேள்விகள்!


ஆயிரம் கேள்விகள்
உன்னுள் ஒலிக்கும்,
ஓராயிரம் பிஞ்சுக்கரங்கள்
புத்தகம் தொலைத்து,
பொதி சுமக்கும் காட்சித்தனை
காண்கையில், கேட்கையில்,

பதிலுக்கு உனது பதில்,
பாவம் யார்ப்பெற்றப்

பிள்ளையோ இவர்கள்,
அவ்வளவே அன்றோ. ?



எழுத்தோலை கோ.இராம்குமார்.

நான்!



நாம் என்பதும்,
நட்பு என்பதும்,
நா வில் தொடங்கி,
நாவால் வெளிப்படுமோ,

நானும் அப்படியே,
நட்ப்பால் நாமாய்.


எழுத்தோலை கோ.இராம்குமார்.

திருமண நாள் வாழ்து ராஜேஸ்வரி அக்காவுக்கு!


இல்லறம் என்றும் நல்லறமே,
என்று உலகிற்கே சொன்னவன்
வள்ளுவன் அவன் வாசுகிப்
போலே, நீங்களும் இதுநாள்
வரையில் இருந்ததுப் போலவே
இனியும், கனியும் நிமிடங்கள்
எல்லாம்
மணியும், கழுத்துமாய்,
மல்லிகையும், மரிக்கொளுந்துமாய்,

மார்கழியும், பனியுமாய்,
மாறாத அன்புடனே,
கண்ணிற்குப் புலப்படும்
கடவுளாய் ஐஸ்வர்யாவுக்கும்,
அஸ்வினுக்கும் என்றும்
இருந்து, சிறந்த வாழ்வினை
தந்தருள்வீரோ.

இனிய திருமண நாள் வாழ்துக்கள் அக்கா!


எழுத்தோலை கோ.இராம்குமார்.

ஆறுதல்!


நித்திரை என்னை
ஆட்கொள்ளும் நேரமே,
பத்திரமாய் நானும்
படுத்துறங்கி, பசி
மறந்து, பகல்மறந்து,
பக்குவமாய் அவளை,
என் கண் முன்னிறுத்தி,
பத்தியக் கால பலன்
கிடைக்க, சொற்ப்பதமாய்

அற்ப்புதமாய், கவி
வரிகள் சேர்த்தே,
வகுடெடுத்த அவள்
உச்சன் சிரசில், இச்
சென்றொரு முத்தம்
வைப்பேனோ,

"கனவு, அதுவே காதலின்
ஒற்றை ஆறுதலோ"


எழுத்தோலை கோ.இராம்குமார்.

பிறந்தநாள் வாழ்த்து – திரிஷாவுக்கு - I


விண்ணில் மினுக்கும்,
நட்சத்திரங்கள் யாவும்
வித்தாய் உந்தன்
வயிற்றினில் மகளாய்
பிறந்து, வளர்ந்து
இன்றோடு எட்டு
வருடங்களும் முடிந்ததோ,
அதன் கொண்டாட்டமாய்,

வான மேக
கூட்டம் எல்லாம்,
வானவில்லாய் திரிந்து,
திரிஷாவாய்
நிமிடங்கள் எல்லாம்,
வண்ணங்கள், ஏழு
வண்ணங்களில்,
மின்னல்கள்ப் போலே,
இடித்து, மின்னி
கண்ண புதைக்குழிக்
குள்ளே மறைத்தே
தான் போகுமோ,

வாழ்த்துப்பா பாடவே
மழையையும்,
மின்னலையும்,
இடியையும், மேள
நாதஸ்வரம் போலே
இசைத்துப் பாடிடுமோ,
இனியப் பிறந்தநாள்
வாழ்த்துகள் என்றே
வாழ்த்து மழையாய்ப்
பொழிந்திடுமோ.

வாழ்த்துக்கள் என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னுயிர் திரிஷா.



எழுத்தோலை கோ.இராம்குமார்.

3. பிறந்தநாள் வாழ்த்து – திரிஷாவுக்கு - II


கண்ணொளி ம்மின்னல்
கடைக்கண் பார்வையால்,
காட்சிப்பொருள் யாவும்
மீனாட்சி உருவமாய்,
கருமாரி, மகமாயி
ஆயிரம்க்காளியின்
அவதார கோலமாய்,
உருமாறி, உயிர்க்கொண்டே
உலகமெல்லாம் உலவினால்,
உன்ப்பெயரை சொல்லினால்,
இரண்டுமே இனைதானோ,

இரண்டாம் உலகம் ஒன்று
வேண்டும்போல், உன்னுடன்
மட்டும் வாழ்ந்திட வேண்டுவேன்,
செல்லமாய், வெல்லமாய்
கொஞ்சியே, எஞ்சி இருக்கும்
என் காலம் முழுதையும்
கழித்திடுவேன், யானும்
உன் மாமனாய் என்றும்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரிஷா.
 
 
 
எழுத்தோலை கோ.இராம்குமார்.

சமாளிப்புகள்!


சாதக பொருத்தம்,
சாத்திரங்கள் எல்லாம்,
சான்றோர் வழித்தொடரும்
சமாளிப்புகள் தானோ,
இல்லை, காதலை
தட்டிகழிக்க சொல்லும்,
சாக்குகள் தானோ,

கண்ணில் நுழைந்து

கவிதையாய்ப் பேசி
கனவுக்குள் நுழையும்
காதலும் பாவமோ,
காதலர் சாபமோ,

வாழ்ந்திட ஏங்கும்,
இளசுகள் மனசும்,
வாழையாய் வீழுமோ,
வார்த்தையால் மூழ்குமோ,
வலிகளில் வாடுமோ,

பக்குவம் பேசியக்
கிழவர்கள் எங்கே,
புத்தகம் எழுதிய
புலவர்கள் எங்கே,
கவிதையில் கதைத்த
கவிஞர்கள் எங்கே,

உங்கள் பேச்சுக்கள்,
எழுத்துக்கள் இன்று
காலாவதியும் ஆனதோ,
காற்றினில் பறந்தே
கடலக் கடந்துப்
போனதோ,

எங்களை, காதலை
வாழவும் வைக்கவே,
வைக்கம் வீரர்ப்போல்
வருவாரோ எவரும்?
வந்தே, நின்றே,
சாத்திர, சாதக
சடங்குகளை வென்றே,
ஒழிப்பாறோ ??



எழுத்தோலை கோ.இராம்குமார்.

பச்சை முளரிப் பூவொன்று!


பச்சை நிறத்தினில்
முளரிப் பூவொன்று,
முழுசாய் மறைந்த,
பசுமையான அவள்
நினைவுகளை,
முள்ளாக குத்தியே,
மீண்டும் நினைவுக்
கொள்ள, வைக்கிறதே....!


எழுத்தோலை கோ.இராம்குமார்.

Friday, October 12

என்னவள்!


ஆயிரம் முறை
பார்த்திருப்பேன்,
ஆண்டாள் விழி
கொண்டவளாம்
அவளின் ஓவியத்தை,


ஆசை,
இன்னும் தீரவில்லை
வேண்டும், மீண்டும்
பார்த்திட வேண்டும்போல்
அடிக்கடி, நொடிக்
கொருமுறை பார்த்துக்
கொண்டிருக்கிறேன்,
கன்ன சிவப்பையும்,
கண்களின் சிமிட்டளையும்,
வளைந்த புருவத்தையும்
வட்ட திலகத்தையும்,
நெற்றிசுட்டியாய்
முல்லைக்கொடியாய்,
முன்நெற்றி படர்ந்திட்ட,
சுருண்ட முடியையும்,
முழ மல்லிகை அழகையும்,
(maple)மேப்பல் இலை ஓவிய
வான்நீல பட்டுப்
புடவையையும்,
வீனைப்போல்
இனிதான இசைக்கு
ஈடான அவள்க்குரல்,
எதுகை, மோனை
கலப்படமில்லா,
ஒன்றே முக்காலடி
திருக்குறளோ?

மொத்தமாய் சொல்வதெனில்,
அவள் அணிந்திருக்கும்,
ஒற்றைக்கல் மூக்குத்தியின்
திருகாணி போலவே,
அவளழகில் திறுகி,
கிறங்கி, மதிமயங்கி,
மலர்ச்சுற்றும் சிறுவ்
வண்டாய் ஆவேனோ
நானும்!



எழுத்தோலை கோ.இராம்குமார்.

Sunday, October 7

சித்திரமோ அவளும் என் கண்களுக்கு!


மென்மை சிரிப்பு,
கூறியப் பார்வை,
மெல்லிய இதழில்
சொல்லிடும் அழகும்,
பார்த்திட, பார்த்திட

தோன்றுமே காதலும்,
காணாமல் போன
கைப்பிள்ளைப் போலே,
காணாமலே தொலைந்தேனே,
சித்திரமோ அவளும்
என் கண்களுக்கு,
எழுந்து, நடந்து
வந்தே, நித்திரையில்
இருந்த என்னை,
எழுப்பியதிலிருந்து
தூங்கவே இல்லை,

கை சேரும் கை
வளைப்போல்,
மை சேரும் மை
விழிப்போல்,
அவளை சேரும்
நாளை எண்ணி
ஏக்கம் கொண்டே
எனை மறந்தேனே.



(சித்திரம் எழுந்து, நடந்து
வந்து என்னிடம் பேசியதை,
என்னாலே நம்ப முடியவில்லை,
நீங்கள் எப்படி நம்ப போகிறீர்கள்.)



எழுத்தோலை கோ.இராம்குமார்.