Wednesday, November 21

மத சார்பற்ற நாடிது


கைப்பேசியில் அலறும் ,
இறைப்  புகழ்ப் பாடும்
அழைப்பு மணிகளும்,
நாமங்களும்,
பட்டைகளும்,
நகமும், சதையுமாய்,
நம்மைவிட்டு என்றும்
பிரியாதோ,

மத சார்பற்ற நாடிது
வென்பதை,
மறக்கிறேன்,
கொஞ்சம் கொஞ்சமாய்.



எழுத்தோலை!
www.facebook.com/ezutholai

Monday, November 12

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!


முறுக்கிப் பிழிந்த
முறுக்கு சிக்கல்கள்,
கடிக்கும் தருணம்
கர, முற வென
நொறுங்கும்,


வாழ்வும் அப்படியோ,
சிக்கலாய் முறுக்கிக்
கிடக்கும் இன்னல்கள்
யாவும் - நொறுங்கும்,
தருணத்தை இப்-
பண்டிகை தொடங்கி
வைக்குமோ?

வெடித்து சிதறி,
புகையாய் போகும்
தெருவும்,
குப்பையாய் சேரும்
சரவெடி,

தீமைகள் யாவும்
வெடித்துச் சிதற,
புகையாய் ஒரு
மாயை தோன்றி,
காற்றில் மறையுமோ,
இப்பண்டிகையால்,
இதுவும் நடக்குமோ?


பெரியவர், சிறியவர்,
அன்னை, தந்தையர்,
சிறுவர், சிறுமியர்,
மழலை என
அனைவருக்கும்,

என்,

இனிய தீபாவளி
நல் வாழ்த்துகள்.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.


"எழுத்தோலை நண்பர்கள் அனைவருக்கும்
எழுத்தோலையின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தித்திக்கும் தீபாவளியாம்!


Nov`11

தீயில் வெந்த பிஞ்சுக்
கரங்கள் சுருட்டிய
லட்சுமி வெடி,
கற்க வசதியின்றி,
கைக் கூலியாய்,

இருபதும், முப்பதும்,
பெற்று
நாற்பதும், ஐம்பதும்,
முடிந்த அன்னைக்கு
அன்னமிட,

அன்றாடம் காட்சியாய்,
தொலைகாட்சி
வாயிலாய்,
சிவகாசியில் தீ விபத்து,
முப்பத்தைந்து
உயிர்கள் தீயில்
கருகியது - என்கிற
செய்தி கேட்டு,
அச்ச்சோ
சொல்லி முடித்து,
அடுத்த நொடியே
பட்டாசு கடை
நோக்கிய பயணம்,

"என் தெருவிலே
எங்க வீடு வெடிதான்
கலக்குச்சி"

பெருமைக்கு
எதோ தின்னும்,
எட்டாவது
வீட்டுக்கரனாய்,
எத்தனை, எத்தனை
பேர்?

தீயாய் பொசுங்குதடி,
கரியாய் போகுதடி,
புகையாய் பரவுதடி,
காசும் - மனசும்,

தித்திக்கும் தீபாவளியாம்,
கசக்கிறது எனக்கு.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.

காக்கை குளியலாய், தண்ணீர் சிக்கனம்!


Nov`11

நீர்த் தேக்க
தொட்டியில்
நிரம்பி வழிந்த நீர்,
தரை தொட்டு,
குட்டையாய்

தோன்றி,
காக்கைகள்
குளிக்க - நீச்சல்
குளமாய் மாறுமோ?

ஆறு, குளம்
இல்லா நகரில்,
இரண்டு மணிநேர
மின்வெட்டு
முடிந்தும், மறு -
நாள் வரும் வரை,

நீரின்றி அமையா
இவ்வுலகில்,
நீரித்தேடி திரிவதும்
இதனால் தானோ?

காக்கை குளியலாய்,
தண்ணீர் சிக்கனம்.


(தண்ணீரை சேமியுங்கள்!)

எழுத்தோலை, கோ.இராம்குமார்.

வீண் பேச்சு!


Nov`10

கிசு கிசுத்த
பேதையின் பேதமையும்,
பேசியிருக்க,
சேர்ந்திருக்க கூடாத
நட்பும்,

விளைவித்த வினையும்,
பகையோ?

மூங்கில்
காடொன்றில் தீயும்,
சிறுதுளி
விழுந்து கனிய - பரவும்,
நெருப்பின் வேகம்,
ஒளியை மிஞ்சுமோ?

வீண் பேச்சு,
பொசுக்கியது மலரொன்றை.


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

இனிய பிறந்தநாள் வணக்கங்கள், உலக நாயகனே!


Nov`07

மகா விஸ்ணுவின்
மருவுருவாய்,
ரூபங்கள் பல ரூபங்கள்,
அவதாரங்கள், பூண்டே
விஸ்வரூபம் கொண்டாய்,

இறைவனோ நீயும் இத் -
திரை உலகிற்கு - அதனால்
தானோ, ஆனாய் உலக
நாயகனாய்...

கமல ஹாசனே நீயே
என் சகலமும், சுவாசமும்
சந்தோஷமுமானாய்...

வணங்கி வேண்டுகிறேன்
இறைவனாம் உன்னை
உன்ப் பிறந்த நாளில்
இன்றும், என்றும் - உன்
ரசிகனாய் நானும்.

இனிய பிறந்தநாள் வணக்கங்கள்,
உலக நாயகனே!



எழுத்தோலை, கோ.இராம்குமார்.



புகைப்பட உதவி: Falcon Designers.

வழியும், உண்டோ?


Nov`04

விலகி,
இருப்பதால் - யவர்க்கும்
வேதனை உண்டோ ,
கண்கள் கலங்கி,
குளமாய் தேங்கி,

வழியும், ஓடும்,
வாய்க்காலாய் மாறும்,

பிரிவு!
வேதனையின்
மழைக் காலமோ?
சேரும், சகதியும் நிறைந்த,
தார் சாலையாய்,
சேலையில் முந்தானையாய்,
சொருகவும் முடியாமல்,
பறக்கவும் முடியாமல்,
பறந்தே, இணைந்தே,
இருப்பதைப் போன்றே,

பார்க்காமல், பேசாமல்
இருந்திடவே வழியும்,
உண்டோ?


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

என்னையும் அறியாமலே!


Nov`01

உருவில் திரு உருவில்,
உமையாள்(உமா), ராஜேஸ்வரி,
என் உடன்ப் பிறக்கா
சகோதரிகள் நீங்கள்,
தான் ஆடாவிட்டாலும்

தன் தசையாடும் என்பதை
உண்மையில் உணர்ந்தேன்,
உங்கள் துடிப்பில் நானும்,

என்னையும் கேட்காமலே,
என் நிலை யறிந்து,
எங்கிருந்தோ வந்தே,
என் இன்னலை போக்க,
கடலலையாய் என்
கண்களில் கண்ணீர்
உருளுமோ என்னையும்
அறியாமலே,

நெருஞ்சி முள் குத்திய
இதயத்தில் மயிலிறகில்
மருந்திட்டு, வலிகளும்
பறந்திடவே செய்தாயே,
அன்புள்ள சகோதரியே,
நீயும் - எனக்கு,
இன்னொரு அன்னையோ ?
உயிர் பிரியும் வலியை,
உன்னுயிர் மட்டுமே
அறியுமோ - அழைக்காமலே,
தவமிருக்காமலே,
கண்முன் தெரிவாயோ?

இருக் கைகள் கொண்டே
வணங்குகிறேன் - தெய்வமாய்
உன்னை, - என்றும்
அழியா உறவைப்
பெற்றேன் தம்பியாய்,
நானும் என்றென்றும்
இருந்திடுவேனே - உன்
சொல்க தவறா
நடந்திடுவேனே.


அன்பு தம்பி,
எழுத்தோலை, கோ. இராம்குமார்.

வெறுமை!


Oct`30

மன்றம் நுழைந்த
தென்றலாய் தானே
நானும் இருந்தேன்,
இதுநாள் வரையில்,
ஏனோ - யாரோ

கதவடைத்துப்
போவாறோ,

தானே சரிந்த
மரமாய்,
சட்டென்று நின்ற
ரயிலாய்,
இறகை மூடிய
பறவையாய்
ஒரு வெறுமை,

என்னை ச்சுற்றிலும்,
ஏகாந்தம் சேர்த்துக்கொண்டு,
ஏளனமாய் பார்க்கிறதே!


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

வாழ்வா - சாவா!



Oct`30

மரண தண்டனைக்
கைதியாய்,
தூக்குக் கயிற்றை
எதிர்நோக்கி -
எண்ணிக்

கொண்டிருக்கிறேன்
மணித்துளிகளை -
சில நாட்களாய்,

மரணம்!
நானே என்னை
மாய்க்கும்முன்,
தானே வருமோ - என்
தலையைக்
கொய்யுமோ?

வாழ்வா - சாவா
போராட்டத்தில் - வாள்
முறிந்த வீரனாய்,
யானும் - ஏனோ
வாள்க்கொடுக்க,
யாருமின்றி,
தலைக்கொடுத்து
வீழ்வேனோ ??

 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

கோமாளி!


Oct`29


இன்னல்கள் இடையுறா
தொடர்வதும் - பின்
தளர்வதும்,

சவாலே - சமாளி,
என்பதை உணர்துவதர்க் -
காகவோ?

சமாளிக்க தெரியா
தவிக்கிறேன் - நானும்
கோமாளியாய்.
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

கனவின் உச்சம்!


Oct`24

ஊடல் பொழுதில்
மயக்கம் கொண்டேன் -
காதலனே,
கண் முன் கண்டேன்
உன்னை,


கட்டியணைத்து,
முத்தமிட்டு,
கடித்திலுத்தேன் உன்
இதழை என் இதழில்,
ஆசையால் நீங்கா
ஆசையால்,

ஆர்ப்பரித்து ஆனந்தத்
தாண்டம் ஆடியவளைப்போல்
சிலிர்த்துப் போனேன்,
சிலநேர அசைவில்,
சிலுமிச விளையாட்டில்,
கட்டில் உடைந்ததில்
விழித்தெழுந்தேன்,

கனவின் உச்சம்
என்னை மிச்சம்
விட்டதால்.

 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

கழுகின் கூர்மை!


Oct`17

வட்டமிடும் கழுகும்
தானோ, திட்டமிட்டு,
கண்ணைச்சுருக்கி,
காத்திருந்து, கொத்தி
சென்றிடும், இரையை

தரை இறங்கியே,

அதுப்போல் தானே,

எழுத்தோலையின்,
கவிதை தோகையதனில்,
முன்னூறாவது இறகாய்,
தோகை மயில் தோழி
நீங்களும், காத்திருந்து
இணைந்தீறோ,

கண்டேன்,
கழுகின் கூர்மையைக்
உங்கள் கண்களில்,
உளம் மகிழ்ந்தே.

நன்றி மிக்க நன்றி!
 
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.