Sunday, September 9

மழை!


September 9

நில்லென்று சொன்னாலும்,
கேட்காத மழை - அதனால்
சொல்வதை நிறுத்திவிட்டு,
மரமாய், மலராய், முழுதாய்
நானும், அவளும் நனைந்து,
நடுங்கும் வேளையும், ஏதோ
கதகதப்பு வேண்டும் போல்
தேட,
கைப்பிடியில் தொடங்குமோ
உரசல்களும், உளறல்களும்,
பரவிய நெருப்பில் கரைந்தது
மழையோ, அவளோ - இல்லை
எங்கள் இதழோ,  இளமையோ,
தேகச்சூடு இளகும் வரையில்,
நனைந்தோம் அடை மழையில்,
துடைத்திட தோனா மீண்டும்
நனைந்தோம் விடா மழையாய்,

அவளும் மழையாய்,
நானும் மேகமுமாய்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

கேட்காத மழை!

September 8

நில்லென்று சொன்னாலும்,
கேட்காத மழை - அதனால்
சொல்வதை நிறுத்திவிட்டேன்,
மரமாய், மலராய், முழுதாய்
நானும் நனைந்து சிரிக்கிறேன்.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

பெரியாரும் கடவுளே!




உண்மையை சொல்வதெனில்,
எனக்கு பெரியாரை,
அவ்வளவாக தெரியாது,
அனால்,
அவர் சீர்திருத்தம் தெரியும்,
அவர் எழுத்துக்கள் புரியும்,
அவர் முனைந்த, முடித்த பல
சாதனைகள் தெரியும்,
அவர்,
கடவுளை கல்லென்றார்,
மனிதனை மதி என்றார்,
பெண்மையை துதி என்றார்,
சாதியை ஒழி என்றார்,
இந்தியை மிதி என்றார்,
தொந்தி கணபதியை -
விதி என்றார் - ஆம்,
அனைத்துமே தன் உயிர்
போல் நினைத்து,
சீர்,
திருத்த வாதியாய்
உலகை வளம் வந்தார்,
வயது, தள்ளாத வயதிலும்,
தனக்கென சேர்க்காமல்
தன் கொள்கைகளை சமமாய்
எல்லோர்க்கும் சேர்த்தார்,
சாமி இல்லை பூதம் இல்லை
என்று சொல்லி எனக்கு
சாமியாய், பூமியாய்
சமத்துவம் சொல்லி,
தருசாய் கிடந்த என்னை,
அவர் சொல்லால் உழுது
இன்று,
முழுசாய், பூக்கும் மரமாய்
மண்ணில் பிறர் நலம் பேண
நிழலாய் செய்தாரே,

மண்ணும், விண்ணும்
இருக்கும் காலம் வரை
மனிதம் இருக்கும்
என்றானால்,
அதுவரை அவரை,
மறந்திடாது இத்
தமிழகமும் உலக
தமிழர்களும்,

உங்களால் நாங்கள்,
வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்!


இனிய பிறந்த நாள் வணக்கங்கள், அய்யா!


எழுத்தோலை கோ.இராம்குமார்

வேண்டாம் கள்!


 
காலையில் சாலையில் - நானும்
போகையிலே கண்டதொரு காட்சியும்
என்னை ஏனோ, இப்படி எழுத வைக்கிறதே,

கள்ளுண்ட காளையர் ஒருவர்,
கடைத்தெரு வழியே போகையில்,
வளைவாய், சாய்வாய் கால்கள் பின்ன,
பின்னங்கால் முன்னே சிக்க,
சரிவாறோ சாலையில், அதனையும்
பூமெத்தைப்போல் பாவித்து, உருண்டு
புரண்டு, ஒழுகும் எச்சில் ஊடே முகம்
புதைந்து, சேறும், சகதியுமாய் ஆடையும்,
அறைக்குறைக் கோலத்தில் அங்கேயே
அறைப்பினமாய் கிடப்பாறோ ?

அளவுக்கு மிஞ்சிய அமுதமும் நஞ்சோ?
அதுப்போல், அளவுக்கு மிஞ்சியக் கள்ளும்
கொள்ளுமே? எதற்கு இந்த நஞ்சு?

வீட்டின் நிலை மறந்திடவா?
ஏழ்மையின் பகை வென்றிடவா ?
மனைவியை வாட்டிடும் இந்நிலை
தாங்கா, எத்தனை மனைவிகள்
மாட்டி தொங்கினார், உத்தரக்
கயிற்றினில்?
பிள்ளைகள் வகுப்பறை சென்றிட
தவித்திட, உன் தவிப்புகள் எல்லாம்
கள்ளும், கள்ளுக்கடை யடையவோ?

கள்ளுக்கும், நஞ்சுக்கும் ஒற்றை
ஒற்றுமையே,
கள்ளுண்டவன் அறைப்பினமாய்,
நடைப்பிணமாய் வீடடைய,
நஞ்சுண்டவன் முளுப்பினமாய்,
நால்வர் த்துணையாய் காடடைவான்,

குடி, குடியைக்கெடுக்கும்,
மது, நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு,
இப்படி எத்தனை வாசகம் படித்தாலும்,
வாசனை கள் வாசனை தேடியே
காலையில், கால்கள் நடக்குமோ?

கள்ளுண்ணும் எத்தனைப்பேர், தான்
கள்ளுன்னா வேளையில், கள்ளுண்டு
மேற்சொன்னதைப்போல், சரிந்துக்
கிடக்கும் கள் ளர்களை காண்கையிலே,
தன்னிலையும் இப்படித்தான் கள்ளுண்டு
திரும்புகையில் என்று எண்ணுவாரோ,
அந்நாளே,
சாக்கடைகளாய் கிடக்கும் கள்ளுக்கடைகள்
பூகடைகளாய் மாறும்,
புது வாழ்வுப் பிறக்கும்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

யாழ்!


 
மீட்டும் இசை யாழ்
வழியே, என் காதில்
கேட்கும் நொடிகள்
எல்லாம்,
என் பார்வை - நீ
வரும் வழியை
தேடி வேடிக்கை
காண்கிறது,

காதல், காதின்
மொழியாய், உன்
பேச்சாய் தானோ,
ஏனோ என்னுள்
புகுந்தது.



எழுத்தோலை கோ.இராம்குமார்

செவ்வாய் பேதை!




செவ்வாய் பேதை,
சில்பகல் சிரித்திடல்
காண்போறும்,
நெடுங் கடல் சுழல் ல்
சிக் கிழுத்து தவிப்போறும்
மீள் வாரோ? கரை சேர்வாரோ ??


எழுத்தோலை கோ.இராம்குமார்

திரிஷா!


 

எடுத்துக் காட்டு!


 

இட்லி!



நிலவினை தரவிறக்க
என் அன்னையிடம் தான்
கற்றுக்கொள்ள வேண்டும்,

அரையாழாக்கு பச்சை
அரிசியை தட்டி - கூடவே
கால்யாழாக்கு உளுத்தம்
பருப்புடன் ஒருப்பிடி
வெந்தயமும் சேர்த்தே,
ஊறவைத்து ஆட்டுக்கல்லில்
ஆட்டியே வெண்ணையாய்,
குருணை குருனையாய்,
மசித்து எடுத்து உப்பும்
கலந்து புளிக்கவிட்டு,
காலையில் விறகைத்தினித்து
அடுப்பைமூட்டி, சட்டியில்
கொஞ்சம் நீரும் ஊற்றி,
குளித்தட்டின் ஒவ்வொரு
குழியில், பொதுவாய்,
மெதுவாய் வார்த்து,
ஆவியால் பூக்கவிட்டு,
ஐந்து, பத்து வினாடிகளில்
தட்டில் தரவிறங்கும்
நிலவாய் வெளிச்சம்
பரப்பும் வெள்ளை
இட்லி,
ஜோடியாய் துகையல்,
கூடவேசாம் பார்,
இத்தனயும் இருந்தால்,
எத்தனை என்
உள்ளிறக்குவேன் என்று
எனக்கே தெரியாது,

என் அம்மாவிடம்
கற்றுக்கொண்டேன்
நிலவினை தரவிறக்க,
வெள்ளையாய்
மல்லிகைப்பூ இட்லி
விடிவில்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

என் ஆச்சி!


 
சிரித்து, மகிழ்ந்து,
சித்திரம்ப்போல்
அழகு தமிழ் பேசி,
திரிந்த காலமும்
நினைவிருக்கா உனக்கு
ஆச்சி?

பலுங்கிக்கல் போல்
பளபளப்பான கன்னம்,
பார்த்தவுடன் மீண்டும்
பார்க்க சொல்லும் இளமை,
தொட்டால் சிவக்கும்
தோல்களும் எல்லாம்,
எங்கே போனது
ஆச்சி?

வெள்ளிமயிர்
வெயிலில் மின்ன,
சொல்லி, சொல்லி
கிள்ளிய கன்னங்களில்,
தேங்காய் நாராய்
சுருக்கங்கள் ஏனோ,
தொட்டால் சிவந்த
கைகள் தோல்கள்
வரி, வரியாய்,
தொய்வாய்,
வயாதகி விட்டது உனக்கு
ஆச்சி,

உன் இத்தனை
ஆண்டுகள் இளமை
தேய்ந்து முதுமை
சேர்ந்திட,
கூடவே உன்
அனுபவமும்
சேர்ந்தே எங்களை
வளர்த்திருக்க கூடுமே,

அதனால் தானோ
என்னவோ,
பாட்டி சொல்லை தட்டாதே,
என்றனர்?



எழுத்தோலை கோ.இராம்குமார்

செல்ல நண்பன்!


 
முற்றத்து வீட்டு
வாசற்ப்படியில்,
மல்லிகை மொட்டு
வாசம் கொடியில்,
லேசாய் சிரிக்கும்
பல்வரிசை பத்தும்
சில்மிஷம் பேசும்,
துளிவிஷம் உண்டவன்
போலே,
தலைசுற்றி நிற்கும்,
தலைக்கால் புரியாதவன்
போலே
காலிடறி சிக்கும்,
மாய கண்ணும்
மான்விழி தானோ,
மயக்கம் கொடுக்கும்
திராட்சை ரசமாய் - என்
கண்களை மயக்குதே,
பார்த்திபன் வில்லும்
பத்திரமாய் உன் புருவமாய்,
அம்பெய்த ஆயத்தமாய்
இருப்பதை போலவே,
என்னை இலக்காய்
நோக்குகிறதே,

சொல்லி வை அதனிடம்
நான் உன் செல்ல நண்பன் என்று!

------------------------------------------------------
எழுத்தோலை கோ.இராம்குமார்
------------------------------------------------------

யானோ, ஈழத்து தமிழன்!


 
உறங்கி விழிக்கும்,
ஒவ்வொரு காலையும்,
உயிர் என்னிடம் இருப்பதை
எண்ணி பெரும்மூச்சுவிட்டு,
பாதித்தூங்கி, தூங்கா நிலையில்,
பிறந்த காலம் முதலாய்
யானும்,

இதோ இன்றும் நீண்டது
எனது விடியா இரவு,
மெய்யும் உயிரும் ஒன்றாய்,
தலையும் உடலும் முழுதாய்,
கையும், காலும் நன்றாய்,
கண்கள், செவிகள் இயல்பாய்,
எல்லாம் அப்படியே
உள்ளது உள்ளபடியே,
துப்பாக்கி குண்டுகள்
கண்டிராத எனது உயிரும்,
வெடிகுண்டு வேட்டையில்
சிதறாத எனது உடலும்,
நானும் - எல்லாம்
நன்றாய் இருந்தும்
அனாதையாய்,

என்னுடன் இருந்தவரெல்லாம்,
இன்று மண்ணுடன் மண்ணாய்,
காலொன்றும், கை ஒன்றுமாய்,
தலை வேறு, உடல் வேறாய்,
குண்டுகள் சலித்த சல்லடை உடலாய்,
பருந்திற்க்கும், கழுகிற்க்குமாய்
மூவேளை விருந்து படையலாய்,
லட்சக்கணக்கில் மொத்தமாய்
என்னை விட்டே மாண்டாறோ,
தமிழனுக்கு வந்த சோதனையோ,
இதுவும்,
இல்லை தமிழுக்கு வந்த
சோதனையோ?

எங்களை மீட்டிட போராடிய
அண்ணனும் எங்களுடன் இல்லையே
இன்று,
யார் எங்களை காத்திடுவாறோ?
யார் எங்களை மீட்டிடுவாறோ?
தமிழீழம் வெறும் கனவோ?

தெரியா கேள்வியுடன்.
புரியாமல் புலருகிறது,
ஒவ்வொரு காலையும்,
கலக்கத்துடனே,

கலங்கி நிற்ப்பவன் யானோ,
ஈழத்து தமிழன்!


---------------------------------------------
எழுத்தோலை கோ.இராம்குமார்
---------------------------------------------

நின்றுவிடும்!




நினைவுகள்
அழியத்துவங்கும்,
நிஜங்களும்
மறையத்தொடங்கும்,
கனவுகள்,
இரவுகள் தவறா
கண்திரை படம் காட்டி,
காலையில்
மறைந்துபோகும்,
கால்கள்
நடந்துபோகும்,
எதிர்வரும் சுவர்முட்ட,
அதுவும்
நிற்கக்கூடும்,
என்றாவது
ஒருநாள் என்
மூச்சும்
நின்றுப்போகும்,
அத்திருநாள்,
இன்றே வருமோ ?
நான்,
ஆடிய ஆட்டங்கள்
எல்லாம்,
முடிந்துப்போகுமே ??



எழுத்தோலை கோ.இராம்குமார்

அன்னம்!



சித்திர சேலை
மடிப்புக்கள் போல,
கலையாத கூந்தல்
கார்முகில் போல,
காற்றினில் பறக்கும்
பூங்கொடி போல,
வாசனை பரப்பும்
சந்தனம் போல,
வார்த்தைகள் யாவும்
கோர்வையாய் என்னை,
உன் கூந்தல் சிடுக்கில்
கோர்க்குதடி,

மேல்
ஆடையாய் என்னை
அணிந்திடு கண்ணே,
ஜாடையாய் ஒருமொழி
பேசிடு பெண்ணே,
வாடையால் தேகம்
சிலிர்த்திடும் முன்னே,
ஜோடியாய் மாலை
மாற்றிட வா, வா,

மஞ்சள் பூ சூடிய
மார்கழி பனியே,
அன்னமாய் என்
கன்னக்குழி நிறைந்த
பொற்றாமரையே!


எழுத்தோலை கோ.இராம்குமார்

எழுத்தோலை!


 

வீர வணக்கம், வீர தமிழச்சிக்கு!!


 
செந்தழல் நெருப்பினில்
குளித்தவள், சொர்க்கம்
சேர்ந்து
இன்றோடு, ஓராண்டு
முடிகிறது,

பெண்ணாய் அவளும்,
எங்கள்
கண்கள் திறந்துவிட்டு,
கண்மூடி
பொசுங்கி விட்டாள்,
அவள் தானே எங்கள்
வீர தமிழச்சி,

செங்கொடி அவள்,
மகளாய் எனக்கும்
பிறப்பாளோ - பிறந்து
தமிழனை காக்க,
இன்னொரு ஜென்மம்
எடுப்பாளோ!


எழுத்தோலை கோ.இராம்குமார்

சிணுங்கல்கள்!


எழுதிய நாள்: 29 ஆகஸ்ட் 2012.