Showing posts with label புத்தாண்டு கணக்கு. Show all posts
Showing posts with label புத்தாண்டு கணக்கு. Show all posts

Sunday, October 26

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

24th Dec 2013


இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து 
வெள்ளை மேக மூட்டம் போல் 
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து 
மனதெல்லாம் குளுமை சூழ்ந்து கொண்டது ..,

உலகெல்லாம் உண்மை நிலைத்து நிற்க
மானுடமெல்லாம் மனிதநேயம் செழித்து
காணும் இடமெல்லாம் அன்பொன்றே
கடவு சொல்லாய் கடவுள் சொல்லாய் ..,

ஏழைக்கும், ஏழ்மையே தெரியாதவர்க்கும்
இன்முகம் கொண்டே எடுத்துரைக்க
அவதரித்த தேவன் மகனோ நீயும்
உதித்த நாளும் இதுவோ...,

மார்கழி பிறந்ததால் நிலமெங்கும் குழுமை - நீ
மார்கழியில் பிறந்ததால் எங்கள் மனதிலும் குழுமை..,

இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து
வெள்ளை மேக மூட்டம் போல்
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து
மனதெல்லாம் குளுமை சூழ்ந்தது உன்னால்...,

இன்னாள் மாத்திரம் அல்ல எந்நாளும் குளுமையே -உன்னை
என்றென்றும் எங்கள் இதயத்தில் சுமப்பதால்.

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

* MERRY CHRISTMAS *

எழுத்தோலை!

விடியாத வறுமை, குடியானவன் குடிலில்! (உலக சாதனைக்கான படைப்பு)

19th Dec 2014





வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்.., (1)

ஒருக்காணி நிலமுண்டு அதனில்
சோளமும், நெல்லும் நடவும் எத்தனித்தே
வளமாய் வாய்கால் வழி நீர்செலுத்த
இரவும், பகலும் உறக்கம் மறக்கும்
வயிற்றில் வரிப்படர்ந்த வருமை உழவன்
வானம் பார்த்து காத்து நிற்க.., (2)

குடியானவன் (உழவன்) குடிலில் விடியாத வருமை
ஏர்கலப்பைகள், எருதுகள், ஏற்றமும் இல்லை,
இயந்திற கலப்பைகள் அதுவும் எட்டாக்கனி நிலைமை
மின்சார எற்றமும் மின்வெட்டு இடைவேளை(யில்)
தள்ளூப்படிக்கு தவிக்கும் வட்டியுமதன் குட்டியும்
ஒருவேளை உணவை ஒத்திகைக்குகூட காட்டிடவில்லை..,(3)

இயற்கையும், செயற்கையாய் மாறிடும் காலத்தில்
பயிர்செழித்த பூவியதில் பூகோள கோடுகள்
சதுரடி அறுபது ரூபாய் பெயர்பலகைகள்
நகரத்திற்கு மிக அருகில் மிகைசொற்கள்
ஏழையும், ஏழ்மையை மாற்றிட துனியும்
எந்தநொடியும், அவன்பிடியை பிரியும் விவசாயம்.., (4)

இப்படியும், எப்படியும் வாழ்வதும் நகர்வதும்
முண்டியடித்து முன்னேற முயல்பவர் துவல்வதும்
ஏறிய ஏணியை எட்டிவிட்டு பார்பதும்
ஏளனமாய் ஏழையை பார்பவர் இருப்பதும்
இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதும் - எல்லாம்
ஆசை எனும் இச்சையால் விளையுமோ..,(5)

வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்
ஏழை உழவன் அவன்நிலை நினைத்து
வருந்தும், வரிசையில் நம்மில் எத்தனைப்பேர் இங்கே?.., (6)

இயந்திர கலப்பை = Tractors
மின்சார எற்ற(மு)ம் = Pump Set

எழுத்தோலை !

Saturday, December 31

புத்தாண்டு கணக்கு!

 
 மருத்துவர் சொன்ன தேதியில் அல்லாமல்
சரியாக ஒன்றாம் தேதியில் பிறந்த மழலையே
உனக்கு இன்றோடு முடிகிறது அகவை 2011,
நாளை உனக்கு பிறந்தநாள்
உலகே கொண்டாடும் சிறந்த நாள்
மிடுக்கென தொடக்கி விடுக்கென
முடியாதே, இம்முறையாவது ...

புதிய செயல்கள் பல தொடங்க வேண்டும்,
தொழில் முன்னேற்றம் பெருக வேண்டும்,
பணபுழக்கம் நிறைய வேண்டும்,
இழந்த வீட்டை மீட்க வேண்டும்,
இல்லத்தரசி கிடைக்கவேண்டும்,
இனிமை சொல்லும் குழந்தைகள் சிரிக்க வேண்டும்,
நண்பர்கள் நலம் பாராட்டவேண்டும்..

இப்படி பல கணக்குகள்,
பெருக்காமலே முடிந்தது இவ்வாண்டு
வருமாண்டில்லாவது இக்கணக்கை
முடிக்கும் முயற்சியில்
அடியெடுத்து வைக்கிறேன், என்
எதிர்கால கணக்கை தொடங்க 2012 இல் .....