Sunday, October 26

சொல்லி, சொல்லி மலைக்கிறேன் !

Jan 07`2013


அழகிய நீர்வீழ்ச்சி அருகில் அவள் 
இதில் எந்த அழகில் நான் மயங்க?
அள்ளி அனைத்திடாதபடி ஆர்ப்பரிக்கும் 
இவையிரண்டும் எனக் கண்முன்னே,

துள்ளி மகிழவும் இயலாதவனாய்
சொல்லி, சொல்லி மலைக்கிறேன்
இன்னும் ஈராயிரம் கண்கள் வேண்டி
இரக்கமுரு சன்முகனிடம் கேட்கிறேன்.

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./580720875353124/?type=3&permPage=1

ழகற வடிவிடை !

27th Dec 2013


ழகற வடிவிடை தின்னும் நித்திரை,
துள்ளும் அசைவுமென் கண்களின் கொடுப்பனை,
அள்ளும் அழகியலில் இவளொரு தொடர்கதை,
ய ர ல வ ழ ள யாரிவள் இடையின இளவரசி?

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./575065872585291/?type=3&permPage=1

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

24th Dec 2013


இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து 
வெள்ளை மேக மூட்டம் போல் 
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து 
மனதெல்லாம் குளுமை சூழ்ந்து கொண்டது ..,

உலகெல்லாம் உண்மை நிலைத்து நிற்க
மானுடமெல்லாம் மனிதநேயம் செழித்து
காணும் இடமெல்லாம் அன்பொன்றே
கடவு சொல்லாய் கடவுள் சொல்லாய் ..,

ஏழைக்கும், ஏழ்மையே தெரியாதவர்க்கும்
இன்முகம் கொண்டே எடுத்துரைக்க
அவதரித்த தேவன் மகனோ நீயும்
உதித்த நாளும் இதுவோ...,

மார்கழி பிறந்ததால் நிலமெங்கும் குழுமை - நீ
மார்கழியில் பிறந்ததால் எங்கள் மனதிலும் குழுமை..,

இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து
வெள்ளை மேக மூட்டம் போல்
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து
மனதெல்லாம் குளுமை சூழ்ந்தது உன்னால்...,

இன்னாள் மாத்திரம் அல்ல எந்நாளும் குளுமையே -உன்னை
என்றென்றும் எங்கள் இதயத்தில் சுமப்பதால்.

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

* MERRY CHRISTMAS *

எழுத்தோலை!

அடி கள்ளி..!

22nd Dec 2013


எரிகிற தீயில் 
எண்ணையை ஊற்றிடாதே 
அடி கள்ளி - நான் 
உறைப்பனி போன்றவன் 
உன்னில் உறைந்துக் கிடக்கிறேன் 
மறுமுறை உன் புகைப்படத்தை
ஒருமுறை கண்டாலும்
உறைப்பனி உருகிடும்
கவிதையாய் கொட்டிடும்..


எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./572709489487596/?type=3&permPage=1

மறுக்காதொரு வரம் வழங்கு..!

22 Dec 2013


நீ எனக்கில்லையடி இப்பிறவியில் அடிப்போடி 
என்ன பாவம் செய்தவனோ நானும், 
மறுப்பிறவியொன்று கண்டிப்பாய் எடுப்பேன் - உந்தன் 
மொத்த அழகையும் மீண்டும் ரசிப்பேன் ,
அப்பொழுதாவது மனமிறங்கு 
முப்பொழுதும் உன் மடியினில் கிடக்க
மறுக்காதொரு வரம் வழங்கு.


எழுத்தோலை!

ஆதலால், காதல் செய்வீர்..!

21st Dec 2013



நீ வெறுக்கும் ஒவ்வொரு உயிரும்
இன்னொருவருக்கு உயிராய் வளம்வரும்
அன்பு என்றும் நிலையானதே இப்புவியில்
அதற்க்கு எப்படித்தெரியும் ஏழைப்பணக்காரன்,
ஆதலால், காதல் செய்வீர்,
தனிமையைத் தகர்த்தெறிவீர்.

எழுத்தோலை!

விடியாத வறுமை, குடியானவன் குடிலில்! (உலக சாதனைக்கான படைப்பு)

19th Dec 2014





வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்.., (1)

ஒருக்காணி நிலமுண்டு அதனில்
சோளமும், நெல்லும் நடவும் எத்தனித்தே
வளமாய் வாய்கால் வழி நீர்செலுத்த
இரவும், பகலும் உறக்கம் மறக்கும்
வயிற்றில் வரிப்படர்ந்த வருமை உழவன்
வானம் பார்த்து காத்து நிற்க.., (2)

குடியானவன் (உழவன்) குடிலில் விடியாத வருமை
ஏர்கலப்பைகள், எருதுகள், ஏற்றமும் இல்லை,
இயந்திற கலப்பைகள் அதுவும் எட்டாக்கனி நிலைமை
மின்சார எற்றமும் மின்வெட்டு இடைவேளை(யில்)
தள்ளூப்படிக்கு தவிக்கும் வட்டியுமதன் குட்டியும்
ஒருவேளை உணவை ஒத்திகைக்குகூட காட்டிடவில்லை..,(3)

இயற்கையும், செயற்கையாய் மாறிடும் காலத்தில்
பயிர்செழித்த பூவியதில் பூகோள கோடுகள்
சதுரடி அறுபது ரூபாய் பெயர்பலகைகள்
நகரத்திற்கு மிக அருகில் மிகைசொற்கள்
ஏழையும், ஏழ்மையை மாற்றிட துனியும்
எந்தநொடியும், அவன்பிடியை பிரியும் விவசாயம்.., (4)

இப்படியும், எப்படியும் வாழ்வதும் நகர்வதும்
முண்டியடித்து முன்னேற முயல்பவர் துவல்வதும்
ஏறிய ஏணியை எட்டிவிட்டு பார்பதும்
ஏளனமாய் ஏழையை பார்பவர் இருப்பதும்
இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதும் - எல்லாம்
ஆசை எனும் இச்சையால் விளையுமோ..,(5)

வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்
ஏழை உழவன் அவன்நிலை நினைத்து
வருந்தும், வரிசையில் நம்மில் எத்தனைப்பேர் இங்கே?.., (6)

இயந்திர கலப்பை = Tractors
மின்சார எற்ற(மு)ம் = Pump Set

எழுத்தோலை !

விடியும்முன் முடியும் காட்சிகள் !

01 Dec 2014


நெருங்கி வரும் இரவின் தொடக்கம்
அந்தியின் முந்தியில் முகம்மறைக்க
பிந்திவரும் நிலவும் அதன் அழகும்
முழம் மல்லியாய் சிரிக்கும் விதமும்
சுற்றி, சுற்றி வந்து செல்லும் 
என்னுள் நிதமும் குடிக்கொள்ளும்,

இனிமை அதன் சுவை யறியாத - என்
நாவும் அதன் நாளமும் பாவம்,
தனிமை இதன் காரணம் புரியாத
நாளும் நீளும் கோலமும் தாபம்,
முதுமை எதன் தொடக்கமோ, முடிவோ
தொடரரும் தினம், கழியும் வயதும்,

விடியும்முன் முடியும்
காட்சிகள் யாவும்,
நொடியும் முள் தின்று விடியும்
எனக்கு மட்டும், இன்றும் என்றும்!

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./562713000487245/?type=3&permPage=1

எட்டியிருந்தால் எதுவும் நடக்காதே...

04 Nov 2014


மழையில் நனையும் பூப்போலே - என்
மனதை நனைத்தாய் பூந்தேனே
தினமும் இரவில் ரசித்தேனே - ஒரு
கனமும் உறங்கா தவித்தேனே,

அடடா அழகே உனைத்தானே
அடங்கா காதலில் பினைத்தேனே
இனியும், துளியும் நான்தானே
எட்டியிருந்தால் எதுவும் நடக்காதே..

ரசித்தப்படி ருசித்துக்கொண்டிருக்கிறாய்

26th Oct 2013


அறுக்கப்பட்ட எந்தன் இதயத்துள் இன்னும் 
கசிந்துக்கொண்டிருக்கிறது உந்தன் இரத்தம்,
நான் துடிப்பதும் தெரியாது, துவண்டுக் 
கிடப்பதும் புரியாதவளாய் நீயும் - என்னை 
ரசித்தப்படி ருசித்துக்கொண்டிருக்கிறாய் உந்தன் 
நாட்களை, ஒவ்வொரு நாளாய்.

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./543323899092822/?type=3&permPage=1

பேசும் ஓவியம்

15th Oct 2013



பேசும் ஓவியம் 
சிரிக்கக் கண்டேன் 
என் எதிரே,
கண்ணிரெண்டிலே,

சில நிமிடம் என்னை 
மரக்கச்செய்த 
அவள் புகைப்படம்.


எழுத்தோலை!


மீண்டு வந்து மீண்டும் கேட்கிறேன்

14th Oct 2013


மீண்டு வந்து மீண்டும் கேட்கிறேன் 
மீளா காதலில் நீந்த நிற்கிறேன், 
கேளாதிருந்தது போதும் பெண்ணே 
இனிமேலும் பொறுத்தால் நெஞ்சம் நோகும்,

நெஞ்சே, நெஞ்சே நீ எந்தன் இலவன் பஞ்சே
என்னை மிஞ்ச காதலில் எவனும் இல்லை.
சொல்லே, சொல்லே அந்த ஒற்றை சொல்லே
சொல்லேன் பெண்ணே இன்றே சொனால் போதும்...(2)


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./536248456467033/?type=3&permPage=1

உன்னில் ஒளிந்துக்கொண்டு

13th Oct 2013


என்னை தொலைத்த இடத்தில் இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன் உன்னை - அது
உன்னில் ஒளிந்துக்கொண்டு என்னில் பாதியை
மண்ணில் புதைத்ததுக்கூடத் தெரியாமல்.
 

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./535590003199545/?type=3&permPage=1

என் செல்ல மருமகளே, "3சா"

11th Oct 2013

எப்பொழுதும் மழை என் நெஞ்சில்
எப்பொழுதும் மழை என் நெஞ்சில்
மழலை இவள் மொழிக் கொஞ்சல்-தனை
நிதம் கேளாதிருந்தும் எதிர் ஒலிக்கும்
என்றுமென் செவி அதனில் அருவியாய்,

எப்பொழுதும் புயல் என் உயிரில்(இதயத்தில்)
எப்பொழுதும் புயல் என் உயிரில்(இதயத்தில்)
இவளை (புகைப்படத்தை) கடக்கும் தருணங்கள் எல்லாம்
வேரோடு சாய்ந்த பனைமரம் நானே,
வேராரோடும் இல்லாத பந்தமோ இவளும்
என் அக்காள் வயிற்றில் உதித்த
அல்லி மலர் கொத்தின் குவியல் அழகும்,

இப்பொழுதும், எப்பொழுதும் முப்பொழுதும்
முகமலர்ந்த சிரிப்பதுவில் முழுமதியாம்,
அம்மாவின் அம்முவாம் நீயும்
அழகாய்தான் கடந்தாயோ ஒன்பது வருடம்,

அல்லித்தண்டு கால்கள் இரண்டும், பதிக்கும்
நடக்கும் முதல் நாள் இன்றும் - உனக்கும்
பிறந்தநாளோ அழகே, அழகாய் எடுத்துவை
எல்லாம் இனிதே, இனியெல்லாம் வளமே,

வாழ்கவே நீ நலமோடு, நல் குணமோடு
வாழியவே நீ பல்லாண்டு பல நூறாண்டு
போற்றும், உன் புகழ்ப்பாடும் பெயருடுக்க
அன்னையின் சொல்கேட்டு, ஐயனின் பொருள்கேட்டு
நடந்திடவே, நடந்திடுமே யாவும் நலமாய்.

வாழ்த்துகள் மாமனின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என் செல்ல மருமகளே, "3சா"

எழுத்தோலை!

கடல் கடந்து, தூர தேசம் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் ....

08 Oct 2013



கடல் தாண்டி தடம் பதித்தாலும் - இன்றும்
இங்குள்ளப்படியே அங்கும் ஆராதனைகள்,
தமிழ் கலாச்சாரங்கள், மொழிப் போற்றுதல்கள்
எல்லாம் அளவாய், அழகாய், அழகாய்...,

எந்நாடு சென்றாலும் கலாச்சாரம் மறக்காமல்
வாட்ஸ்அப் (Whats up?) என்றாலும் வாடிக்கை மறைக்காமல்
பண்பாட்டை இன்னும் புண்ப்படா காத்து
புன்னகை பூக்கும் புகைப்படம் எடுத்து
தாய்நாட்டில் இருந்தும் எல்லாவற்றையும் மறந்த
எங்களையும் நீங்கள் கேள்வி கேட்பதுப் போன்றே,
உச்சந்தலையில் நச்சென்று குட்டிய்தாய் உணர்கிறேன்,

வாழ்க நீவீர் நலமுடன் வளமுடன் - என்றும்
குறைவில்லா புன்னைகை இதழுடன்.

கடல் தாண்டி தடம் பதித்தாலும் - இன்றும்
இங்குள்ளப்படியே அங்கும் ஆராதனைகள்,
தமிழ் கலாச்சாரங்கள், மொழிப் போற்றுதல்கள்
எல்லாம் அளவாய், அழகாய், அழகாய்...,


எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./532401573518388/?type=3&permPage=1

ஒப்பிட்டு பார்க்கவும் முடியவில்லை..!

07 Oct 2013



நிழலுலகில் வாழ்ந்திருந்தவனுக்கு நேற்றொருநாள் மட்டும்
நிலவுடன் நடக்க கிடைத்ததொரு வாய்ப்பு - இருந்தும்
தொலைவில் இருந்தே கண்களை சிமிட்டி - விடிந்ததும்
சந்திக்கலாம் என்றே சாடையில் சொல்லியதே,

எட்டியிருந்தே, கண்கள் கொட்டி பார்த்திருந்தவனாய்
நானும், விடியும்வரை காத்திருந்தும் காணவில்லை,
நிலவையும், அவளையும் அருகருகில் நிறுத்தி
ஒப்பிட்டு பார்க்கவும் முடியவில்லை, முடியவில்லை.


எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./532176530207559/?type=3&permPage=1

குறையேதும் இல்லா அழகியே..!

02 oct 2013


இல்லை என்று சொல்லிட ஏதுமில்லை
உன்னிடம்,
அழகில் குறையேதும் இல்லா அழகியே,
மழழை மொழி கேட்டும் இல்லை - என்னிதயம்
என்னிடம்,
தவித்தேன தினம், தினம் உன்னினைவாலே,

கனிமொழியாளே கவர்ந்தென்னை கொன்றவளே -
மணிமேகலையே,
இனியென்ன என்னையும் செய்திட உத்தேசமோ,
சிதைந்தேனே உன் என்ன சித்திரவதையால் அனுதினமும்,
விரைந்து நீ வந்தாலே வசந்தமாகும் என் வாழ்வுமே.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./529805917111287/?type=3&permPage=1

Fake ID யால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.


01 Oct 2013



Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

Emailu facebooknu
Freeyaa கொடுத்தா மாமு
ஆளாளுக்கு accounttu ஒன்னு
Open பண்றான் மாமு
Emailu facebooknu
Freeyaa கொடுத்தா மாமு
ஆளாளுக்கு accounttu ஒன்னு
open பண்றான் மாமு

Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

Profile picturela பொண்ணு போட்டோ
Cover photola குழந்தை photo
பேருக்கூட வச்சான் பாரு
Research பன்னினாக் கூட கெடைக்காதப் பேரு
அட, அங்கதான் நூறுப் பேரு
Queவுலதான் நின்னான்ப் பாரு,

Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

Hiனு status போட்டதுக்கு 50 likeu
I am sorrynu status போட்டதுக்கு 100 commenttu
கொழந்த photova share பன்னா
அதுக்கு கூட 40 பேரு.....,
Cute, beautifulnu அடிச்சிவிடுறான்
என்ன கொடும sir இது,
எத்தனப்பேரு chatla போய்
I love you சொன்னானோ..,
ஏமாந்த கொக்காட்டாம்
அவன்கிட்ட bulbutதான் வாங்கினானோ,

fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

பொம்மைக்கு பொடவ கட்னாலே
பெருமூச்சி விட்டவங்கடா நாங்க
நமிதா படம் போட்ட idல இருந்து
friend request வந்தா விட்ருவோமா தூங்க
எல்லாமே மாயைன்னு தெரிஞ்சிகிட்டோம் lateta
இந்த facebookke fakebookkunu புரிஞ்சிடுச்சி righttaa
போதுண்டா, போதுண்டா fakeக்கான friendshipe
fake idக்கு goodbye சொல்லாட்டி வீணாகும் வாழ்க்கையே,

fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு...
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு...

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./529142487177630/?type=3&permPage=1

திருநாளாய் ஒருநாள் வேண்டுமென் வாழ்விலே..!

28th Sep 2013


மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே
மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே..

கலவரப்பூமியாய் என் இருதயமும் ஆனதே
கலங்கரை விளக்காய் நீ எங்கோ எரி(இரு)ந்தும்
நிலவரம் அறிந்துவர குறுஞ்செய்தித்தூது விடுத்தும்
குளக்கரை கொக்காய் காத்திருத்தலே மிச்சம்,

மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே
மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே

வெகுநாளாய் வேகிறேன் தீமூட்டியவள் நீயே
மழைநாளாய் மாறவே கேட்கிறேன் உன்னையே
திருநாளாய் ஒருநாள் வேண்டுமென் வாழ்விலே
பொன்னாளாய் அந்நாளும் ஆகுமே உன்னாலே,

மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே
மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே..

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./527659973992548/?type=3&permPage=1

உனையிழந்து துடித்திருக்கும்..!

26th Sep 2013



நீல கடலோரம் நீயிருந்த நொடிகள் எல்லாம்
நீரும் அதில் வாழும் மீன்களும் உன்னால்,
நித்திரை இழந்து தவித்திருக்கும் - பேரழகி
நான் எப்படி தவிக்கிறேனோ இந்நாள் அப்படியே
நீயும் போனப்பின் உனையிழந்து துடித்திருக்கும்.


எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./526812747410604/?type=3&permPage=1

உன்னில் நனைய செய்வாயோ?

24th Sep 2013


மண்(உன்)வாசனையில் மயங்கியவன் நானும்
மயக்கம் தெளியதவனாய் இன்னும்,
மழை(நீ) வரும் அறிகுறி தெரிந்தபின்னும்
மனம் உன்னையே தேடும்,
மழையும், மயிலிறகும், உந்தன் மனதும் 
மாறாத அழகோ என்றும்,

மழையே நீயும், வருவாயோ - என்னை
உன்னில் நனைய செய்வாயோ?


எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./525954007496478/?type=3&permPage=1

கிண்ணத்து மீன்..!

24th Sep 2013



உன் 
கன்னத்து குழிகளில் விழுந்து 
கிண்ணத்து மீன்ப்போல் ஆனேன்,
என் 
எண்ணத்தில் உதித்திடும் கவிகளில் - சிரித்திடும் 
வண்ணத்தமிழாம் உன்னை கண்டப்பின்.


எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./525836404174905/?type=3&permPage=1

என்னை இன்னும் வலுப்படுத்தும்..!

22nd Sep 2013


என் எண்ணங்களை இங்கு பதிவிட 
எழுத்துக்களை தமிழிடம் யாசிக்கிறேன்
விருந்துப் படைத்தர் போல சுவையாய் 
சொற்களும் சொல்லிடமாளாது கிடக்க 
அள்ளி அள்ளி மையில் கலந்து 
அவையோர் யாவர்க்கும் படைக்கிறேன்,

பசிமறந்து, படித்து மகிழ்ந்து நீங்களும்
ருசியெப்படி என்று சொல்லி செல்லுங்கள்,
தவறுகளை திருத்திடவும்,
புதுமைகளை சேர்த்திடவும் - என்னை
இன்னும் வலுப்படுத்தும் அதுவும்.

நன்றி, நன்றி அன்பர்களே, நண்பர்களே.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./524874314271114/?type=3&permPage=1

தேன் சுவை மறந்தவனும் நானே..!

21st Sep 2013


தித்திப்பது தேன் மட்டுமல்ல - நீ 
தித்திக்க பேசும் அந்த நொடிகளுமே,
தேன் சுவை மறந்தவனும் நானே - உன் 
தேன்மதுர பேச்சை இழந்தவனாய் ஆனேன், 

திரும்பிக்கோடு,
விரும்பிக்கொண்டே இருக்கிறேன்.

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./524421554316390/?type=3&permPage=1

தின்னைகள் அற்ற சென்னையில்...!

20th Sep 2013



திரட்டிக் கொண்டு ஓடுகிறது மேகம் - அவள்
கூந்தலில் நுழைந்து கருமையை புணர்ந்து,
இன்னும் சற்று நேரத்தில் அவள் வரக்கூடும்
மழையாய் என்னை நனைக்க,

தின்னைகள் அற்ற சென்னையில் - எங்கு
அமர்ந்து அவளை ரசிப்பேனோ ?

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./523985871026625/?type=3&permPage=1