
இருட்டினில் மின்னிடும் நட்சத்திரமே,
என் இருக் கையில் வருவாயோ ?
இளவரசியாய் என் தோழி சிரிக்க
அவள் இதழோரம் உன்னை பூசிவைக்க,
இருட்டினில் நடந்திடும் வெண்ணிலவே,
என் தோளோடு தோள் சேர்வாயோ ?
நளினமாய் என் தோழி நடனமிட
அவள் நடனத்தை நாடெங்கும் ஒளிபரப்ப,
இருட்டினில் ஒலித்திடும் சில்வண்டே,
என் செவியினில் வந்து சத்தமிடு
அமைதியான நதியாய் என் தோழி உறங்கிட
அவள் துயிலை நீ கலைகாதிருக்க.
இருட்டினில் ஓய்வெடுக்கும் சூரியனே
என் பேச்சை நீ கேட்பாயோ ?
நாளை ஒரு நாள் தாமதமாய் வந்தால் போதும் ?
விடிய விடிய என்னோடு பேசிய என்தோழி
சற்று முன்னர் தான் தூங்க சென்றாள் .
No comments:
Post a Comment