
மூன்றம்பிறை முழுநிலவாய்
முகம் சிவக்கும் என்னவளின்,
மிளிர்கின்ற கண்கள்,
சிமிட்டாமல் பேசியதும்,
சிலுமிச இதழ்கள்
சிரிக்காமல் சிரித்ததும்,
இல்லாத இடை ஒடித்து
நடக்காமல் நடந்ததும்,
நான் அவளோடு இருந்த
நாட்களின் நினைவுகளாய்,
முப்பொழுதும் அவள் கற்பனையில் !!
:::::: இராம்குமார் கோபால் :::::::
2 comments:
அருமை . தொடர்ந்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள் சகா..
மிக்க நன்றி, தோழா !
Post a Comment