Sunday, September 9

என் ஆச்சி!


 
சிரித்து, மகிழ்ந்து,
சித்திரம்ப்போல்
அழகு தமிழ் பேசி,
திரிந்த காலமும்
நினைவிருக்கா உனக்கு
ஆச்சி?

பலுங்கிக்கல் போல்
பளபளப்பான கன்னம்,
பார்த்தவுடன் மீண்டும்
பார்க்க சொல்லும் இளமை,
தொட்டால் சிவக்கும்
தோல்களும் எல்லாம்,
எங்கே போனது
ஆச்சி?

வெள்ளிமயிர்
வெயிலில் மின்ன,
சொல்லி, சொல்லி
கிள்ளிய கன்னங்களில்,
தேங்காய் நாராய்
சுருக்கங்கள் ஏனோ,
தொட்டால் சிவந்த
கைகள் தோல்கள்
வரி, வரியாய்,
தொய்வாய்,
வயாதகி விட்டது உனக்கு
ஆச்சி,

உன் இத்தனை
ஆண்டுகள் இளமை
தேய்ந்து முதுமை
சேர்ந்திட,
கூடவே உன்
அனுபவமும்
சேர்ந்தே எங்களை
வளர்த்திருக்க கூடுமே,

அதனால் தானோ
என்னவோ,
பாட்டி சொல்லை தட்டாதே,
என்றனர்?



எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: