Sunday, September 9

வேண்டாம் கள்!


 
காலையில் சாலையில் - நானும்
போகையிலே கண்டதொரு காட்சியும்
என்னை ஏனோ, இப்படி எழுத வைக்கிறதே,

கள்ளுண்ட காளையர் ஒருவர்,
கடைத்தெரு வழியே போகையில்,
வளைவாய், சாய்வாய் கால்கள் பின்ன,
பின்னங்கால் முன்னே சிக்க,
சரிவாறோ சாலையில், அதனையும்
பூமெத்தைப்போல் பாவித்து, உருண்டு
புரண்டு, ஒழுகும் எச்சில் ஊடே முகம்
புதைந்து, சேறும், சகதியுமாய் ஆடையும்,
அறைக்குறைக் கோலத்தில் அங்கேயே
அறைப்பினமாய் கிடப்பாறோ ?

அளவுக்கு மிஞ்சிய அமுதமும் நஞ்சோ?
அதுப்போல், அளவுக்கு மிஞ்சியக் கள்ளும்
கொள்ளுமே? எதற்கு இந்த நஞ்சு?

வீட்டின் நிலை மறந்திடவா?
ஏழ்மையின் பகை வென்றிடவா ?
மனைவியை வாட்டிடும் இந்நிலை
தாங்கா, எத்தனை மனைவிகள்
மாட்டி தொங்கினார், உத்தரக்
கயிற்றினில்?
பிள்ளைகள் வகுப்பறை சென்றிட
தவித்திட, உன் தவிப்புகள் எல்லாம்
கள்ளும், கள்ளுக்கடை யடையவோ?

கள்ளுக்கும், நஞ்சுக்கும் ஒற்றை
ஒற்றுமையே,
கள்ளுண்டவன் அறைப்பினமாய்,
நடைப்பிணமாய் வீடடைய,
நஞ்சுண்டவன் முளுப்பினமாய்,
நால்வர் த்துணையாய் காடடைவான்,

குடி, குடியைக்கெடுக்கும்,
மது, நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு,
இப்படி எத்தனை வாசகம் படித்தாலும்,
வாசனை கள் வாசனை தேடியே
காலையில், கால்கள் நடக்குமோ?

கள்ளுண்ணும் எத்தனைப்பேர், தான்
கள்ளுன்னா வேளையில், கள்ளுண்டு
மேற்சொன்னதைப்போல், சரிந்துக்
கிடக்கும் கள் ளர்களை காண்கையிலே,
தன்னிலையும் இப்படித்தான் கள்ளுண்டு
திரும்புகையில் என்று எண்ணுவாரோ,
அந்நாளே,
சாக்கடைகளாய் கிடக்கும் கள்ளுக்கடைகள்
பூகடைகளாய் மாறும்,
புது வாழ்வுப் பிறக்கும்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: