Sunday, September 9

பெரியாரும் கடவுளே!




உண்மையை சொல்வதெனில்,
எனக்கு பெரியாரை,
அவ்வளவாக தெரியாது,
அனால்,
அவர் சீர்திருத்தம் தெரியும்,
அவர் எழுத்துக்கள் புரியும்,
அவர் முனைந்த, முடித்த பல
சாதனைகள் தெரியும்,
அவர்,
கடவுளை கல்லென்றார்,
மனிதனை மதி என்றார்,
பெண்மையை துதி என்றார்,
சாதியை ஒழி என்றார்,
இந்தியை மிதி என்றார்,
தொந்தி கணபதியை -
விதி என்றார் - ஆம்,
அனைத்துமே தன் உயிர்
போல் நினைத்து,
சீர்,
திருத்த வாதியாய்
உலகை வளம் வந்தார்,
வயது, தள்ளாத வயதிலும்,
தனக்கென சேர்க்காமல்
தன் கொள்கைகளை சமமாய்
எல்லோர்க்கும் சேர்த்தார்,
சாமி இல்லை பூதம் இல்லை
என்று சொல்லி எனக்கு
சாமியாய், பூமியாய்
சமத்துவம் சொல்லி,
தருசாய் கிடந்த என்னை,
அவர் சொல்லால் உழுது
இன்று,
முழுசாய், பூக்கும் மரமாய்
மண்ணில் பிறர் நலம் பேண
நிழலாய் செய்தாரே,

மண்ணும், விண்ணும்
இருக்கும் காலம் வரை
மனிதம் இருக்கும்
என்றானால்,
அதுவரை அவரை,
மறந்திடாது இத்
தமிழகமும் உலக
தமிழர்களும்,

உங்களால் நாங்கள்,
வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்!


இனிய பிறந்த நாள் வணக்கங்கள், அய்யா!


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: