Monday, December 26

அவளறிவோம் !


பேச்சு :
நாணோடு விர ல்சேர
விளைகின்ற இசையே, நீ
காற்றோடு மோததே,
என்னவள் பேசும் நேரமிது !

பார்வை :
இலயசைய, மலரசைய
காற்றசைவின் காரணமோ ? அந்த
மலரசைய அதன் இதளசைய - என்னவள்
கண்ணசைவை கேட்டிடுமே !

சிரிப்பு :
தேன்சிந்தும் மகரந்தம் மறுமலர்
பிறக்க கருவாகும் - என்னவள்
இதழ் சிந்தும் புன்னகையோ
என்னை அவளுக்குள் சிறையாக்கும் !

நடை :
கடலலையும் கரை நோக்கி
காலம்ப்பல தொடர்ந்தாலும்,
கடற்கரையோரம் பதிந்திருந்த - என்னவள்
கால்த்தடம் கண்டு, வந்தவழி தவறென்றே,
பின்னோக்கி சென்றிடுமே !

வடிவு :
மல்லிகையின் அரும்பான
விழிகள் கொஞ்ச !
வெண்ணிலவின் வடிவோ
அவள் முகமென்பேன்!
விடியலில் கேட்கின்ற கூவல்,
குயில் தானோ !
என்னை எழுப்பையில்
அவளைக்கும், அக்குரல் !
பறக்கின்ற பறவைக்கும்,
அவளுக்கும் ஒரு தொடர்பு
அதன் இறகேதான்,
எனைவருடும் அவள் விரலோ?
இல்லாத இடத்தை
தான் எங்கே தேடுவது
அவ்ளிடையை தான் சொல்கிறேன்,
யாரிடம் கேட்பது!
வடிவுக்கு அரசியை இனியும்,
எக்கணம் சொல்லி முடிப்பேன்
சொல்லிருந்தால் சொல்லுங்கள்
தமிழில்,
எனை சொக்க வைத்த
சொக்கியாம் அவளை !
புதுமொழி கொண்டே நானும்
புனைவேனே காதல் பா வும் !!

No comments: