Saturday, December 24

முல்லை பெரியாற்றின் இடுக்கி(னில்)!!



மேகம் அழுத கண்ணீரிலே
மண்ணில் விழுந்த துளிகள் எல்லாம்
மழைத்துளிகளாய் சேர்ந்து,
சிறு குட்டையாய் தேங்கி,
தெரு நெடுக ஓட,
ஓடையாய் மாறி,
கால்வாயில் கலந்திடவே,
பெருக்கெடுத்த வெள்ளமாய்
நதியென தவழ்ந்து,
ஆறென ஆர்பரித்து,
முக்கூடல் சேர்ந்து,
முக்தி பெரும் எண்ணத்தில்
கடல் தேடி ஓடி வர,
வறண்ட காலம் வராமலிருக்க
அதநடுவே அணை போட்டோம்
முப்போகம் விளைதிடவே.
மண்ணில் பிறந்த எவனுக்கும்
இம்மண்ணே சொந்தமில்லா நிலையில்
தண்ணீர் மட்டும் எங்கனம் ?
இதில் தவறில்லை, இது தவறினால்
நாளைய தலைமுறை தழை க்குமோ ???

தமிழா ! நீ

மதம், இனம், மொழி
பார்த்தா பழகினாய் ?
இருப்பதையும் கொடுத்து
வருவோரையெல்லாம் வரவேற்றாய்,
பிழைக்க தெரிந்தவனா நீ ?
உன்னை நீயே கேட்டு பார் !
பிறரை கெடுக்க முனைந்தவனா நீ ?
ஒருக்காலும் இருக்காது !
வெட்கபடு இன்றாவது,
வந்தவரெல்லாம் உன்னை ஏய்த்து
உன் முதுகில் ஏணியாய் ஏறியே - உன்
உச்சி முடி ஒவ்வொன்றாய்
பிடுங்க தொடங்கி, இறுதியில்
மொட்டையடித்தும் முடித்துவிட்டனர்,

இன்னுமா உறக்கம் உனக்கு ??

விழித்திடு, புது விடியலும் உன்னை அழைக்குதே,
புறப்படு, புயலாய் உன் செயல் தொடங்க,
சேர்ந்திடு, கை கோர்த்து தமிழனின் ஒற்றுமையை உயர்த்த,
தடுத்திடு, முல்லை பெரியாற்றின் இடுக்கினில்
மலையாய், மலைத்திருக்கும் அணையை உடையா - அன்றோ !
மரண படுக்கையில் படுப்பது, நீயும் நானும் மட்டுமன்று
நம் நாளைய தலைமுறையும் கூட ...

ஒன்று கூடுவோம், ஒற்றுமை காட்டுவோம், அணையை காத்திடுவோம் !!

No comments: