Saturday, March 17

என்னுடன்பிறவாதவள் மகளே !



"தமிழுக்கு அமிழ்தென்றுபேர்" அத் -
தமிழ் குடியில் பிறந்த, இனிய
அமிழ்தாம் நீயும் !

பச்சை பசுங் கொண்டல்
வண்ணன் - திருமால்,
விரிசடைக் கடவுள் - சிவன்,
குன்றம் எறிந்த - முருகன்,
இவர்கள் அருள்க்கொண்ட - திரு
முகம் உணதாம் !

எட்டுத்தொகை நூல்கள் -
குறுந்தொகை,
நற்றிணை,
ஐங்குறுநூறு,
அகநானூறு,
கலித்தொகை,
புறநானூறு,
பதிற்றுப்பத்து,
பரிபாடல்
பத்துப்பாட்டு நூல்கள் -
திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
மலைபடுகடாம்,
குறிஞ்சிப்பாட்டு,
முல்லைப்பாட்டு,
பட்டினப்பாலை,
நெடுநல்வாடை,
மதுரைக்காஞ்சி
இவை எவற்றிலும் கூறாத
இலக்கிய, இலக்கணமாய் - உன்
மழலை பேச்சும் - மதுரமாய்!!
இருந்திருக்க கூடுமே!

"நன்றியறிதல்,
பொறையுடைமை,
இன்சொல்லோடு
இன்னாதஎவ்வுயிர்க்கும் செய்யாமை,
கல்வியோடு
ஒப்புரவாற்ற அறிதல்,
அறிவுடைமை,
நல்லினத் தாரோடு நட்டல்
இவை எட்டும் சொல்லிய
ஆசார வித்து " என் சொல்லும்,
ஆசாரக்கோவை சொல்லாய் - நீ !
ஒழுக்கம் கொண்டிருக்க தவறுமோ !

மலையிர்ப்பிறக்கும் சந்தனம்,
கடலில்ப்பிறக்கும் முத்து,
யாழிர்ப்பிறக்கும் இசை - போல்,
உன் புகழ் உலகம் போற்றும் -
நாள், விரைவில் என - உன்
கண்கள் சொல்ல அறிந்தேன் !

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனகேட்ட தாய்" இத்திரு -
குறளின் பொருளாய் நீ விளங்கிட, உழைக்கும்
உன் அன்னைத்தந்தையர் இதயம் - இன்பம்
பொங்கிட நீ உயர்வாய்! உறுதியே !!!


::::: இராம்குமார் கோபால் :::::


No comments: