Sunday, March 18

உழவன்!





செந்தணல் ச்சூரியன்,
சித்திரையின் மத்தியிலே,
உச்சத்தின் உக்கிரமாய்,
உருக்கி வார்க்கும்,
தீ க்குழம்பாம், செங்கதிரால்!

ஒழுகி வழிந்திடும்,
வியர்வை அலைகளை,
துடைக்க இயலாது,
உழவனின் க்கைகளதும்,
கைதியாய் சிக்கியதோ!
சேற்றதன் காவலிலே!!

வானம் பார்த்த பூமியதில்,
வரம் கேட்டு வானம் ப்பார்தான்,
வருணனவன் வருகை வேண்டி.
வற்றிவரும் நீர்நிலைகள்,
வறண்டு விடும் நிலைன்நோக்க,
நட்டு வைத்த, நஞ்சை!, புஞ்சை!!
பூபெய்தும் நாள்நெருங்க,
வாய்க்காலில் நீரின்றி,
வாடிடுமோ ! நெல்க்கதிரும் ?
வாங்கிவைத்த கடனதுவும்,
அடகுவைத்த நகையதுவும் - இந்த,
அறுவடையில் அடைதிடவே,
எண்ணி உழைக்கும்,
ஏழை உழவன் -கனவும்,
நீரின்றி, நிறை பெறுமோ ?

நீரின்றி அமையா இவ்வுலகத்தில் - தண்
நீர்வேண்டி அலையும், உழவன் !
நிலைகெட்ட காலத்தில் - நிம்மதியை,
தொலைத்த தேடலில் அவனும்,
வருமென்று! தவம்கிடந்து!!
வானம்பார்த்து நின்றிருந்தான்.

சித்திரையின் சீற்றத்தில்,
ஞாயிரதன் நாவும் கூட,
வற்றியதோ! என்னவோ!!
வானம் கூட வறண்டு போயிட்ட்ரே !

:::: இராம்குமார் கோபால் :::::

No comments: