Sunday, April 28

நிஜமாய், நிஜமாய் நீயும் !

Feb`26

நிஜமாய், நிஜமாய் நீயும் 
நிஜமாய், நிஜமாய் நீயும்,
நிழல்லல்ல, பணியல்ல, பூவல்ல,
நித்தம், நித்தம் எரிக்கும் வெயிலல்ல,
நித்திரையில் நிகழும் கனவல்ல,
நிம்மதி சொல்லிடும் சிரிப்பல்ல, 
நெடுவயல் ஓடையின் பயிரல்ல, 
நொடியல்ல, நிமிடமும் அல்ல,

நிஜமாய், நிஜமாய் நீயும்
நிஜமாய், நிஜமாய் நீயும்,
என் உயிர் ஊடே புகுந்து
குருதியோடை வழிப்பரவி
நாளும் என் நாளங்கள் யாவும்
என்னுள் நடந்து என்னையும்
நடமாட வைக்கும் ரெத்தமும்
சதைகளுக்கெல்லாம் - தெளிவாய்
அறிவை ஊட்டி வழிநடத்திடும் என்
உடல், பொருள், ஆவியும் நீயோ,

நிஜமாய், நிஜமாய் நீயும்
நிஜமாய், நிஜமாய் நீயும்,
நான் தானே, நாம் தானே
நாம் தானே, நான் தானே
சொல்லிடு உன்வாய் மொழி
சொல்லிடு,
யாழிசை பரப்பும் கீதமே,
என் சங்கீதமே! நீயும்.


எழுத்தோலை!

No comments: