Friday, June 15

சமுக அவலங்கள்! குழந்தை கல்வி!! (கவிதை திருவிழா)



தன்னுயிரை பொருளென்று கருதாமல்,
உனக்குள் வளர்ந்த உயிர் வளர்த்து, வலிபொருத்து,
திங்கள் பத்து, தவம் கிடந்தது - என்னை
பெற்றவள் நீ, நீலாவதி! உன்னால் இன்று - நான்,
நற்கல்வி கற்று, நல்வழியில் நடக்கிறேன்,
நன்றிகள் அம்மா உமக்கு, கோடான கோடிகள்.
-----------------------------------------------------------------------------

உன்னைப்போல் தானே ஆயிரம், ஆயிரம் கோடி
அன்னையர் பெற்றனர், அவர்களுடைய பிள்ளைகளை,
ஆயினும் எத்தனை, அன்னையும் அவளது பிள்ளையை,
ஆத்திச்சுடி கற்க வைத்தாள், அ ஆ இ ஈ சொல்லி கொடுத்தால்?,
கணவன் ஆசைக்கு இணக்கி, அவசரத்தில் இயங்கி,
அடுக்கடுக்காய் பூப்பூக்கும் செம்பருத்தி பூப்போல்,
அடுத்தடுத்து, இடைவெளியின்றி எத்தனை பிள்ளைகள் ?

வறுமை வாழ்வில், வயிறு நிறைக்க சோறில்லை,
வருஷம் ஒன்றானால் வயிற்றை நிரப்ப தவறியதில்லை,
வாட்டிவதைக்கும் வறுமையில் இருந்தாலும்,
குவாட்டர், கட்டிங் இல்லாத நேரமில்லை,
பிள்ளைகளை படிக்க வைக்க பணமில்லை - இருந்தும்,
பாரம் சும்மா வைத்து, குப்பை பொறுக்க விட்டு,
பத்தும், இருபதுமாய் கொண்டுவரும் காசைக்கூட,
கயமை தகப்பன், பிடுங்கிப்போய் குடிக்க, பாடுப்படும்
இதயம், இளம்பிஞ்சின் மனதும் - எத்துனை,
துயர்கொள்ளும் இறைவா ?

ஏடெடுத்து, எழுதப்பயின்று, எண்ணி, எண்ணி எண்ணக்கற்று,
எழுத்து கூட்டி படிக்க கற்று, பாடசாலையில் இத்தனையும் பயின்று,
பண்புடன், பணிவுடன், முதன்மை பெற்று - வளர்த்திடும்
கல்வியும், உன்னை சீரோடும், சிறப்பாய் நிறுத்திடும் இவ்வுலகில் நாளை.

அடிப்படை கல்வியின்றி, அணுவும் அசையுமோ,
அழகு இளம்பிள்ளைகள், அதனையும் ருசிக்குமோ,
மேதைகள், அறிஞர்கள் குறைவில்லா இதேநாட்டிலே,
ஏழ்மையும், படிப்பின்மையும்தான், முதன்மை குறைச்சலே.

இளமையில் கல்வி, இயற்கையில் விளையுமோ?
இருப்பவர் உதவிட, கிடைக்குமோ அதுவுமே,
தன்னார்வ தொண்டர்கள், முயற்சிகள் பலிக்குமோ?
தலைமுறை அடுத்த தலைமுறையிலேனும் ,
அனைவரும் கற்றவர் ஆவரோ, நம் தேசத்தில்?







எழுத்தோலை  கோ. இராம்குமார் 

No comments: