Saturday, April 7

அழகு!



எழுததெரிந்த எனக்கு
சொல்லத்தெரியவில்லை,
சொல்ல நினைத்த பொழுது,
சொற்கள் கிடைக்கவில்லை,
இல்லாத, சொல்லாத வரிகள் அதுவும்,
வாளை, மீன் னதன் முள்ளாய்,
சிக்குதே, தொண்டையிலே.

குழல் ஊத, குயில் பாட,
புதுராகம், தேடிஎடுத்து,
மெட்டுகொரு வரி பிடித்தேன்,
வஞ்சியவள் அழகை சொல்ல.

வண்ணமயில் நீலம்,
சிரிக்கும் ரோஜா சிவப்பு,
உடையணிந்து உட்கார்ந்திருக்கும், அவளும்,
கோயில் சிற்பம்! அழகோ, அத்துணை அழகு!

பாவாடை, தாவணி பெண்களை இன்றோ,
பார்ப்பது என்பது மிக, மிக அரிது,
பார்த்தேன் அவளை, படித்துறை அருகே,
ஆயிரத்தில் ஒருத்தியாய், அமைதியாய் சிரித்தாலே!

மாட்டிய கம்மல், அவளசைந்திட்ட பொழுது,
அதில் சிக்கிய ஒற்றை மயிராய், நானுமே,
கூந்தலில் மல்லிகை, கொஞ்சமாய் இருப்பதனால்,
கூட்டமாய் வண்டுகள், கெஞ்சலாய் சினுங்குமே.

மாடத்து புறாக்கள், மறந்துபோகும் பறக்கவே,
மைவிழியாள், விழியதனால், மெய்மறந்தே,
கோயிலக்குள மீன்களனைத்தும், நீந்துவதை
நிறுத்திவிட்டு, நீயொன்றே கதி எனுமே.

கேட்க்காத சுரம் எட்டில்,
சொந்தமாய் வரி சேர்த்தே,
செந்தமிழின் மொழிக்கொண்டே,
சொல்லி முடித்தேன் செல்வி உன்னழகை !

::: கோ.இராம்குமார் :::::



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

(http://parithimuthurasan.blogspot.in/2012/11/mattikkaamal-lanchamvaanga.html மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…
Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…