Friday, October 12

என்னவள்!


ஆயிரம் முறை
பார்த்திருப்பேன்,
ஆண்டாள் விழி
கொண்டவளாம்
அவளின் ஓவியத்தை,


ஆசை,
இன்னும் தீரவில்லை
வேண்டும், மீண்டும்
பார்த்திட வேண்டும்போல்
அடிக்கடி, நொடிக்
கொருமுறை பார்த்துக்
கொண்டிருக்கிறேன்,
கன்ன சிவப்பையும்,
கண்களின் சிமிட்டளையும்,
வளைந்த புருவத்தையும்
வட்ட திலகத்தையும்,
நெற்றிசுட்டியாய்
முல்லைக்கொடியாய்,
முன்நெற்றி படர்ந்திட்ட,
சுருண்ட முடியையும்,
முழ மல்லிகை அழகையும்,
(maple)மேப்பல் இலை ஓவிய
வான்நீல பட்டுப்
புடவையையும்,
வீனைப்போல்
இனிதான இசைக்கு
ஈடான அவள்க்குரல்,
எதுகை, மோனை
கலப்படமில்லா,
ஒன்றே முக்காலடி
திருக்குறளோ?

மொத்தமாய் சொல்வதெனில்,
அவள் அணிந்திருக்கும்,
ஒற்றைக்கல் மூக்குத்தியின்
திருகாணி போலவே,
அவளழகில் திறுகி,
கிறங்கி, மதிமயங்கி,
மலர்ச்சுற்றும் சிறுவ்
வண்டாய் ஆவேனோ
நானும்!



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: