Tuesday, October 16

வலி!


கண்ணிமைக்கா பார்த்திருந்தேன்,
கணக்கின்றிப் பார்த்திருப்பேன்,
ஒற்றைக்கால் கொக்கைப்போல
கால்க்கடுக்க நின்றும்,
காணாமல் ஏமாந்தே,
நழுவ விட்டேனடி,
மீனோ நீயும்,
துள்ளி மறைந்தாயடி,

நேரில்,
ஒரு முறையும் பார்த்ததில்லை,
ஒரு வார்த்தையும் பேசியதில்லை - என்
கைப்பேசியில் உன் நிழற்ப்படம்
திணித்தே, நாள்த் -
தவறா பார்த்திருந்தேன்,
பித்தனைப் போலவே,
நித்தமும் நானுமே,

உண்டாயா, உறங்கினாயா,
உள்ளங்கை கழுவினாயா,
உறக்கம் கொண்டெலுந்தாயா,
ஊருக்கெல்லாம் போய் வந்தாயா,
இப்படி தானடி நாள்தோறும் நானுமே,
உன் நிழற்ப்படம் அதனை ஏந்தி,
ஏதேதோ புலம்புகிறேன்,

எரியும் நெருப்பில்
கரியும், புகையும்,
எஞ்சத் தேடினால்,
மிஞ்சுமோ சாம்பலும்,
அப்படி தானடி,
ஆனதடி இவ்விடம்,

நினைவும், நிழலும் (நிழற்ப்படம்),
கரியும், புகையுமாய்,
கனவும், கவிதையும்,
சரிசமமாய், சாம்பலாய்,

வலி, எப்போதும் என்னோடு.
 
 
 
எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: