Sunday, October 26

இது மழைக்காலம் (மயில்களை ஆடச்செய்யும், என்னை பாடச்செய்யும்)

20th Sep 2013


மழைக்கு முன்:
---------------------

மூன்றடி தூரம் முன்நூறடியாய் நகர
முயன்றதில் தோற்று, தேற்றுகிறேன் மீண்டும்,
முடியாத கனவதில் தெரியாமல் நுழைந்திட
அறியாதப் பிள்ளையைப்போல் அவசரமாய் நானும்,

மழைக்கு முன் மறைக்கும் எழிலியதுவாய்
வானாம் அவளை அனைத்தேனே மெதுவாய்,
கூனாய் குறுகி, தானாய் மடிந்தாள்
வாழையிலை குலையை மறைத்தார்ப் போலே,

சொட்டும் மழைத்தூறல் கொட்டும் கனத்தில்
தொட்டு பார்த்திட துடித்தே நனைந்தேன்,
மூன்றடி தூரம் முன்நூறடியாய் நகர
முயன்றதில் தோற்று, தேற்றுகிறேன் மீண்டும்,


மழையில்:
--------------

மலை முகடுகள் இரண்டுமே அப்படியே
பச்சையாடை போர்த்தி பத்திரமாய் மறைய
பகலவன் ஒளிப்படாத குகைக்குள் உறங்கும்
பகல்நிலவு வெளிச்சம்பட்டே சுபிட்சம் கண்டேன்,

மழையில் நனைந்ததில் மயிரிழையில் விரல்கலுரசிட
மின்னலும் தெரித்ததேதவள் கண்களின் ஜன்னலில்
பற்றியது, பரவியது தடையில்லா மின்சாரம்
தமிழக தேவையும் அப்படியே தீர்ந்திருக்கும்,

இதழ்தொடவும் இல்லை இருந்தும் கிளர்ச்சி
நுதல்மயிர் நகர்த்தி முத்தமிடல் மகிழ்ச்சி
எவையிருந்து இவையில்லை அவை நடுவே
அவளிருந்தும் மதுவருந்தவே அவளிதழ் பிடித்தேன்,

மழைக்குப் பின்:
-----------------------
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,

மேற்கொண்டு சொல்லிட சபை நாகரீகம் தடுத்தபடி,
கற்பனைகளை படிப்பவர் ரசனைக்கே விட்டபடி - நானும்,
நகர்கிறேன் இவ்விட விளக்கை அணைத்தப்படி.



எழுத்தோலை!

No comments: