Sunday, April 28

ஈழ விடுதலை வெறும் கனவா?

Mar`11

ஆற்றுப் பசிக்கு அடித்து 
இழுத்துக்கொண்டு போன 
சோற்றுக்கற்றாழை செடியாய் 
திக்குத்தெரியா ஊர்க்கரையில்
ஒதுங்கி நிற்கிறேன் 
ஓர் ஓரமாய்,
உறைவிடம், உறவினர்கள் மடிய
கணவன், பிள்ளைகளை இழந்து,

உண்மையில் நான்,
விதவையா, அனாதையா ?
ஊமையாய் போன பொம்மையாய்,
வன்னி மண்ணில் பெண்மையை இழந்து,
எஞ்சிய உயிரை வெற்றுடலுடன்
ஒட்டவைத்து கண்ணீரில் தத்தளிக்கும்

"ஈழத்து தேசத்து தமிழ்ப் பெண் நான்"

குண்டு சத்தம் என்றும்
கேட்டகாத உனக்கும்,
சிதறி தெறித்து - தேடிப்
பிடித்த உடல்களும்,
பெண்னென்றும் பாராமல்
ஆவலைப் பெண்கள் - எங்களின்
துணிகளை கிழித்து,
நாய்களைப் போல்
நாலைந்து சிங்கள ஓநாய்கள்
சிதைத்த கர்ப்பை,
அறுத்த மார்பகங்களை,
கண்டும், கேட்டும் இன்னும்
எப்படி உன் மனம் இறங்கவில்லை,
இரக்கமில்லாதவன் தமிழன் இல்லை,
நீயும் தமிழனா?

என்குரல் கேட்டும், கேட்காதுப்போல்
வேடிக்கைப் பார்க்கும் உலக மக்களில்
நீயும், உன் நாடும் அதன் தலைவர்களும்
ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை,

நன்றி தமிழா,
தன்னலம் கருதும் தலைவா,
அரக்கனின் அடிமை இந்தியா,
ஈழ விடுதலை வெறும் கனவா ???

நன்றி, நன்றி, நன்றி உலக மக்கள்,
அனைவருக்கும் நன்றி.


எழுத்தோலை!

No comments: