Wednesday, July 25

மெட்டுக்கு என் பாட்டு! (விழிகளிலே விழிகளிலே, குள்ளநரிக்கூட்டம்)




விழிகளிலே உன் விழிகளிலே,
எனக்கொரு கவிதை நீ சொன்னாய்,
வரிகளிலே அதன் வரிகளிலே,
எதுகையாய் என்னையும் நீ கோர்த்தாய்,
சொல்லாத கவிதையாய் அது இனித்ததே,
இன்னிசை சேராமாலே சுகம் சேர்த்ததே....

(விழிகளிலே ...........)

விண்ணுக்குள் என்னை நட்டு நீரூற்றினாய்,
விண்ணுக்குள் என்னை நட்டு நீரூற்றினாய்,
கண்களில் காதல் கொடி பறக்குது உயர்ந்து,
எனக்கிது இதுநாள் தெரியவும் இல்லை,
இருட்டில் கிடந்ததெந்தன் உயிரும்,
புரியுது, புரியுது புலம்பலை நிறுத்து,
உனக்கென பூத்திருக்கும் பூவுமிது புதுசு,
சொல்லாமல் இருந்திட்டால் சொர்க்கத்தில்
இடமில்லை, சொல்லிட வந்துவிட்டேன்
வந்துவிடு என்னுடனே.

(விழிகளிலே ...........)

சொல்லுக்குள் எண்ணெய் விட்டு சூடேற்றினாய்,
சொல்லுக்குள் எண்ணெய் விட்டு சூடேற்றினாய்,
சொந்தமெல்லாம் உதறிவிட்டு வர தோன்றுதே,
இதயமும் துடிப்பது இசைப்போல் இருக்கு,
உள்ளுக்குள்ள நீயிருக்க நிஜமாய் கிறுக்கு,
உன்முகம், முகமது நான் காண்கையிலே,
இலக்கண இலக்கியம் உயிர்க்கொள்ளுதே,
சொல்லாமல் இருந்திட்டால் சொர்க்கத்தில்
இடமில்லை, சொல்லிட வந்துவிட்டேன்
வந்துவிடு என்னுடனே.

விழிகளிலே உன் விழிகளிலே,
எனக்கொரு கவிதை நீ சொன்னாய்,
வரிகளிலே அதன் வரிகளிலே,
எதுகையாய் என்னையும் நீ கோர்த்தாய்,
சொல்லாத கவிதையாய் அது இனித்ததே,
இன்னிசை சேராமாலே சுகம் சேர்த்ததே,



(விழிகளிலே ...........)



- எழுத்தோலை கோ.இராம்குமார் -
Photo Courtesy: Google!

No comments: