Tuesday, July 17

மலர்ச்சோலை!



மல்லிகைக்கு மறுப்பெயர்த்தேடி,
மிதிலை மாநகரில் நான் நின்றேன்,
செல்வியே மைதிலியாய்,
மலர்ச்சோலையில் அமர்ந்திருந்தாள்,

மலர்மணம் வீசும் சோலையதில்,
மல்லியும், முல்லையும்,
முளரியும், சென்பகமுமாய்,
மலர்ந்து சிரிக்கும், மனம் வீசும்,
மயக்கம் தரும் அதனையும் - ரசித்திட
வருவோரும், போவோரும்
ஆயிரமாயிரம் இருப்பரோ - இருந்தும்,
அவர்களில்த்தான், யாரைத்தான் - ஒரு
மலருக்காவது பிடித்திருக்குமோ?

மைதிலியே,
உன் மலர்ப்பாதம்,
பூஞ்சோலைத்தொடும் நேரம்,
சிரித்திருக்கும்,
பூத்திருக்கும் பூக்கள் அத்தனையும்,
அழகாய்
உன் திருவாய், மொழி நீ பேச,
கேட்டிருக்கும்,
பூக்கள் எல்லாம் மெதுவாய்
தலையசைக்கும், இன்னிசைப்போல்
ரசித்திருக்கும்,
இருந்தயிடம் தாழ்ந்து
சாய்ந்திருக்கும்,
கால்கள் இரண்டு இல்லையே
என்று துயர்க்கொள்ளும்,
இருந்திருந்தால் - உன்னுடனே
வந்திடவே நினைத்திருக்கும்,
அத்தனை அழகாய் மைதிலி - நீ
பிறந்ததனால் - மலர்க்கூட
மயங்கிடுமே, தன்னை மறந்து
உன்னுடனே வந்திடுமே.

இத்தனையும் கண்டு,
நான் வியந்து நின்றேனே,
தேடிவந்த மலர் சோலையிலே,
செதுக்கி வாய்த்த கல்லாக,
வார்த்தையில்லா கவியாக.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: