Tuesday, July 17

வலி!



என்ன தான் வேண்டும் என்றே
தெரியாது, புரியாது, வருவதும்
போவதும் வழக்கமாய் இருப்பது
உன் வாடிக்கையா - இல்லை,
வேடிக்கையா?
நான் அடித்து துவைக்கும்
சலவை கல்லா, இல்லை,
வெட்டி சாய்த்துவிட்டு போகும்,
பட்ட மரமா, இல்லை
பாவமா, பழியா, பரதேசியா?
என்னத்தான் வேண்டும் உனக்கு?
என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய் என்னிடம்?
விட்டுவிடு, என்னிடம் எதுவும் இல்லை
கொடுப்பதற்கு,
உயிரையும் உருவிக்கொண்டு,
ஓட ஓட வெட்டியதற்கு சமமாய் - நானும்
அன்றே, அங்கேயே மரித்துவிட்டேன்,
இன்று - நீ நிற்ப்பது என் கல்லறையில்,
வந்ததற்கு ஒரு மலர்செண்டை மட்டும்
வைத்துவிட்டு போ.
என் ஆவி அடங்கி, அமைதியாய் உறங்கிடும்,
உன் நினைவை துறந்து, தூய்மையாய்!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -


Photo courtesy: Negis Art.

No comments: