Tuesday, July 17

ஒத்திகை நாடகம்!



ஒற்றையாய் திரிவது
உனக்கு கிடைத்த சாபமோ,
கூட துணையின்றி வெறுமையாய்
தனிமையில் எத்தனை இரவுகள்?

உன்னை தேடி ஒருநாள் வருவாள்,
என்று எங்கேயும் நீயும் நில்லாமல்,
மேற்கில் தொடங்கி கிழக்கில் மறைந்து,
மீண்டும் மாலையில் தொடங்குவாய்,
உன் காதல், தேடல் காரியத்தை..

நிலவே ஒ, வெண்ணிலவே!

உன்னைப்போல் ஒருவன்
இங்கே, ஒய்ந்துப்போய்
உட்கார்ந்தே விட்டான்,
போதுமடா சாமி என்று,
நொந்த இதயம் பிடித்து,
நோகும் நொடிகள் கடந்து,
ஒடிந்து போன செடியாய்,
வாடி, வதங்கி, காய்ந்து,
பறந்தே போனதவன்
இதயம் என்றோ.

ஒற்றையாய் உன்னை பார்த்தே,
ஒருக்கிளியாய், சிறகை இறுக்கி,
ஓரக்கிளை போதுமென்று,
ஒவ்வொரு நாளாய்,
உதிர்கின்ற இலையாய்,
நாட்களை எண்ணி,
நாசி நிற்கும் நாளுக்காய்,
இன்றே,
ஒத்திகை நாடகம்
பார்க்கின்றானே!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: